• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

புது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்

|
  social acitivist mugilan got conditional bail from madurai high court

  திருச்சி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசுவோர்கள் மிரட்டப்படுகிறார்கள், ஆனால் எங்கள் போராட்டம் தொடரும் என்று சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் தெரிவித்தார்.

  கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திடீரென மாயமானார் முகிலன். இவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், திருப்பதி ரயில்வே நிலையத்தில், போலீசார் முகிலனை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  இதையடுத்து, ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் முகிலன் மனுத்தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில், முகிலனை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

  அதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்

  ஜாமீன்

  ஜாமீன்

  இருப்பினும், நீதிமன்றம், முகிலனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை முகிலன் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் முகிலன். தாடியெல்லாம் ஷேவ் செய்துவிட்டு, நீண்ட மீசையுடன் புதிய கெட்அப்பில் அவர் இருந்தார்.

  உண்மை

  உண்மை

  நிருபர்களிடம் முகிலன் கூறியதாவது: நாட்டில் உண்மையைப் பேசினால் ஆபத்து, என்பது எங்களுக்கு தெரியும். ஒவ்வொருநாளும் உயிரை பணயம் வைத்து தான் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பாக வாக்குமூலம் அளித்தபோது ரஜினிகாந்திடம், கேள்வி கேட்ட இளைஞர் இரண்டு நாட்கள் கடத்தி என்று வைக்கப்பட்டிருக்கிறார், அவர் எங்கு என்பது தெரியாத நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்தோம்.

  மறதி

  மறதி

  ஸ்டெர்லைட் விவகாரத்தில் வழங்கப்படும் வாக்குமூலம் வெளியே கசிந்தால் காவல்துறையினர் அவர்களை பழி வாங்கும் சூழ்நிலை உள்ளது. குளித்தலையில் ஒரு குளத்தை தூர்வார வேண்டும் என்று சொன்னதற்காக இரண்டு பேர் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் இந்த நாடு. ஜெயலலிதா மரணத்தில் இன்னமும் மர்மம் நிலவுகிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் நாடு உள்ளது. ஏதாவது நடந்தால், இரண்டு நாள் கத்துவார்கள், அதன் பிறகு மறந்து விடுவார்கள் என்பது தான் இவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

  தமிழர் உரிமை

  தமிழர் உரிமை

  எங்கள் மீது எத்தனை அடக்குமுறைகள், அவதூறுகள், அசிங்கங்கள் கற்பிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள கூடிய துணிவு எங்களுக்கு உண்டு. தமிழ்மண் தமிழருக்கானது. இதை அழிக்க யார் வந்தாலும் அதை எதிர்க்க மக்களைத் திரட்டி போராடுவோம். இவ்வாறு முகிலன் தெரிவித்தார்.

   
   
   
  English summary
  Anti- Sterlite activist Mugilan says, he will fight for Tamilnadu issues.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X