திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6!

ஓட்டை போட்டு நகையை அள்ளியது தான்தான் என முருகன் கூறியுள்ளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    lalitha jewellery Thief Murugan | லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கொடுத்த வாக்குமூலம்-வீடியோ

    திருச்சி: "பக்காவா ஸ்கெட்ச் போட்டு.. ஓட்டையும் போட்டது நான்தான்.. அதான் எனக்கு மட்டும் 12 கிலோ நகை.. கணேசனுக்கு வெறும் 6 கிலோதான்" என்று திருட்டு முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். முருகனுக்கு 10 நாட்களுக்கும் மேலாக வலைவீசி நம் போலீசார் தேடி கொண்டிருந்த நிலையில், பெங்களூரில் சரண் அடைந்ததில் கொஞ்சம் அப்செட்ஆனார்கள்.

    இங்கு நாமே பிடித்து வைத்திருந்தால், அந்த விசாரணையே வேறு.. இப்போது கோர்ட் கட்டுப்பாட்டில், அதுவும் வேறு மாநில கட்டுப்பாட்டில் முருகன் இருப்பதால் கையை பிசைந்தனர்.

    லிப்ஸ்டிக் லிப்ஸ்டிக் "அழகிகள்".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்!

    மண்ணுக்குள் நகை

    மண்ணுக்குள் நகை

    ஆனால் சரண் அடைந்த மறுநாளே பெங்களூரு போலீசார் முருகனிடம் விசாரணையில் இறங்கினர். அப்போது, கொள்ளை அடித்த நகைகளை திருவெறும்பூர் பக்கம் உள்ள ஒரு ஆத்தோரத்துல மண்ணுக்கு அடியில புதைச்சு வைத்திருப்பதாக சொன்னார்.

    12 கிலோ நகை

    12 கிலோ நகை

    இதைக் கேட்டதுமே முருகனை அன்றைக்கு ராத்திரியே கர்நாடக போலீசார் ரகசியமாக திருவெறும்பூர் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கே புதைத்து வைத்த 12 கிலோ நகைகளை மீட்டுக் கொண்டு, திரும்பவும் பெங்களூருக்கே யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்ல முயன்றனர்.

    மடக்கி பிடித்தனர்

    மடக்கி பிடித்தனர்

    திருவெறும்பூர் பகுதிக்கு பெங்களூர் போலீசாருடன் முருகன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததுமே நம் போலீசார் அலர்ட் ஆகிவிட்டனர். விரைந்து சென்று மடக்கி பிடித்து தங்களுடைய கஸ்டடிக்குள் கொண்டு வந்து.. பெரம்பலூர் ஆயுதப் படை மைதானத்தில் வைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் நிறைய தகவல்களை முருகன் வாக்குமூலமாக சொல்லி வருகிறான்.

    பிளான்

    பிளான்

    "லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்க ஒரு வாரம் நோட்டம் போட்டோம்.. குடும்பத்துடன் பலமுறை நோட்டம் போட்டோம்.. மொத்தம் 4 பேர் சேர்ந்து இந்த பிளானை செய்தோம். கொள்ளை அடித்ததும், நகைகளை எங்களுக்குள் ஷேர் செய்து கொள்வது என்பது எங்கள் பிளான்.

    ஸ்கெட்ச்

    ஸ்கெட்ச்

    மதுரையை சேர்ந்தவன் கணேஷ்.. இந்த கணேஷூம், நானும்தான் சுவற்றில் ஓட்டை போட்டோம். உள்ளே போயி நகைகளை அள்ளி வந்தது நாங்கதான். மீதி 2 பேர் வெளியில நின்னுட்டு இருந்தாங்க. முக்கியமான ஸ்கெட்ச் போட்டது நான்தான். அதனால் எனக்கு 12 கிலோ நகை, கணேசனுக்கு 6 கிலோ.. வெளியில இருந்த 2 பேருக்கும் 5 கிலோ" என்று கூறி அதிர வைத்தான் முருகன்.

    விசாரணை

    விசாரணை

    அது மட்டுமில்லை.. "போன ஜனவரி மாசம் திருச்சி சமயபுரம் டோல்கேட் பக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்கில் வெறும் 150 கிராம் தங்கம்தான் கிடைச்சது. இருந்தாலும் அதையும் சரிக்கு சமமா நாங்க பங்கு போட்டுக்கிட்டோம்" என்று அடுத்த அதிர்ச்சி தகவலை அசால்ட்டாக கூறினான்.

    தொடர்பு

    தொடர்பு

    இப்படியே விசாரணை இன்னமும் தொடர்ந்து வருகிறது. மதுரை தல்லாகுளம் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் 1500 சவரன் தங்க நகை, 9 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை, மதுரை சின்ன சொக்கிகுளத்தில் சங்கர் என்பவரின் வீட்டில் 170 சவரன் கொள்ளைகளில் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை பற்றி கேட்டால், முருகன் சரியா பதில் சொல்லவில்லையாம். எப்படியும் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் மொத்த கதையையும் வாங்கிடலாம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English summary
    "All four of us shared stolen jewelry," Gang leader Murugan's confession to the Trichy police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X