India
  • search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆட்டுக்குட்டிகள்" மிரட்டி கத்துகின்றன..அந்த "திமிர்" இருக்கே.. திருச்சியை திணறடித்த நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

திருச்சி: திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.. இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரது பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பா? என்று மூத்த தலைவரும், திமுக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கடுங்கோபத்துடன் கேள்வியை எழுப்பி உள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே! சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே!

அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதியில், கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. இந்தக் கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றும்போது தமிழக பாஜகவை சரமாரியாக விமர்சித்தார்.. அவர் பேசியதாவது: "டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் மிரட்டி கத்துகின்றன... வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தை சேர்ந்த அமைச்சரை தரக்குறைவாக விமர்சிப்பதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்... பயந்து அஞ்சி நடுங்கும் கட்சியல்ல திமுக.. ஜனநாயக உச்சியின் சிகரமாய் திகழ்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

 ஓடாத ஆழித்தேர்

ஓடாத ஆழித்தேர்

திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.. இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரது பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பா? இதற்கெல்லாம் அஞ்சி பதுங்கும் கழகமல்ல இந்த திமுக. எந்தவொரு மிரட்டலையும் சவாலையும் திமுக சந்திக்கும்... எதற்குமே எப்போதுமே சமரசமாகாதவர் கருணாநிதி.. அவர் வழியிலேயே தற்போது ஸ்டாலினும் நடைபோட்டு வருகிறார்.. இனியும் அவ்வாறே நடைபோடுவார்... ஆனால், அவர் சமரசமாகிடுவார் என்றெல்லாம் அவதூறு பரப்பி கொண்டு வருகிறார்கள்... ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் இன்று பூந்தோட்டமாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கல்லறை

கல்லறை

கல்லறை சென்ற தலைவர்களை இன்றைக்கு சனாதன கும்பல் கொச்சைப்படுத்தி வருவது என்ன மாதிரியான, நாகரிகம்? நபிகளை அவமதித்ததால் அந்நிய நாடுகளில் கண்டன போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்... நம்மை மிரட்டி பார்ப்பவர்களுக்கு அஞ்சாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலினுக்கு உறுதுணையாய் திமுகவினரின் அயராத உழைப்பும், தீவிர கண்காணிப்பும் இனிதான் இங்கு தேவை... எத்தனையோ பிரச்சனைகள் சூழ்ந்த பள்ளிக் கல்வித்துறையை சிரமம் பாராது, சிரித்த முகத்துடனேயே அமைச்சர் செயல்படுத்துவது ஆச்சரியமே... ஆனால் அவரையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

 பல்லக்கு

பல்லக்கு

கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள்... இனியும் சும்மா இருக்க மாட்டோம். இனி திமுக சார்பில் பாசறை கூட்டங்கள் நடக்கும்.. கடந்த 77 வருடங்களுக்கு பிறகு காவிரியில் தண்ணீர் திறந்தது ஸ்டாலினின் சிறந்த ஆட்சியில்தான் என்பதை பெருமையாக சொல்கிறோம்.. ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல முடியாமல், பிரச்சனைகளை தேடி அலைகிறார்கள்.. ஒன்றேகால் வருடங்கள் போராடிய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றுவதற்கு துணைபோனது இந்த அதிமுக.. இந்திய அரசியலிலிருந்தே இவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்" என்றார்.

English summary
nanjil sampath has criticized on tamilnadu bjp and praises mk stalins dmk government நாஞ்சில் சம்பத், முதல்வர் ஸ்டாலினை பாராட்டி திருச்சி கூட்டத்தில் பேசியுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X