திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா?

Google Oneindia Tamil News

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்பட 10 பேர் எதற்காக விமர்சனம் செய்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

திருச்சியில் கார் ஊழியருக்கு மிரட்டல்.. யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது.. 7 தலைமறைவு திருச்சியில் கார் ஊழியருக்கு மிரட்டல்.. யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது.. 7 தலைமறைவு

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேச மாட்டேன் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி வினோத் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். பின்னர் அதனை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

வினோத் கொடுத்த புகார்

வினோத் கொடுத்த புகார்

இதன்பின்னர் தன்னை மிரட்டியதாக வினோத், திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதந்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்,.

என்னென்ன வழக்கு

என்னென்ன வழக்கு

இதனிடையே சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153A,504,505(1)(b)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், வழக்கறிஞர் ராஜசேகர் கூறுகையில், இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.

குஷ்பு

குஷ்பு

அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.

புகாரினால் பாய்ந்த வழக்கு

புகாரினால் பாய்ந்த வழக்கு

அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
New cases have been registered against saattai Duraimurugan for defaming the late former chief minister Karunanidhi and BJP Khushboo using the video and using the image of minor children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X