திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் ஏகே 47-களில் கையெறி குண்டுகளை வீசும் லாஞ்சர்கள் தயாரிப்பு.. இத்தனை நன்மைகளா?

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மேலும் ஒரு புதிய ரக ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.

Recommended Video

    இந்திய ராணுவத்திற்காக திருச்சியில் ரெடியாகும் புதிய வகை துப்பாக்கி

    ஏற்கெனவே எஸ்ஆா்சிஜி ரக துப்பாக்கி, ஏஎம்ஆா் ரக துப்பாக்கி ஆகியவற்றின் உற்பத்தியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக யூபிஜிஎல் ரக ஏகே47 ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆயுதமானது ஏகே 47 ரக துப்பாக்கிகளில் கையெறி குண்டுகளை வீசுவதற்கான லாஞ்சராக செயல்படுகிறது. இது ஒற்றை ஷாட் மற்றும் ப்ரீச் லோடட் லாஞ்சராகும்.

    தேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம் தேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம்

     400 மீட்டர் தொலைவு

    400 மீட்டர் தொலைவு

    இதில் கூடுதல் சிறப்பாக அதிக வெடிக்கும் திறன் கொண்ட கையெறிக் குண்டுகளை இணைக்கும் வசதியுள்ளது. இது 400 மீட்டா் தொலைவு வரை சென்று தாக்கும். இதன் எடை 1.6 கிலோ ஆகும். பல்வேறு வகையான கையெறி குண்டுகளை பயன்படுத்துவதன் சுடும் சக்தியை அதிகரிக்க முடியும்.

     கையெறி குண்டுகள்

    கையெறி குண்டுகள்

    எதிரிகளின் துருப்புகள் மீது ஏகே. 47 ரக தோட்டாக்கள், கையெறி குண்டுகள் என ஒரே நேரத்தில் இருவகையான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் எதிரிகளை முன்னேறவிடாமல் தடுத்து அழிக்க முடியும். இந்த வகை லாஞ்சரை ஒரு நிமிடத்தில் துப்பாக்கியுடன் இணைக்கவும், அகற்றவும் முடியும்.

     கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

    கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

    இந்திய ராணுவம், மத்தியக் காவல் படை, மாநில காவல் துறையின் சிறப்புப் படைகளில் பயன்படுத்தும் 40-க்கு 46 மி.மீ. அளவுள்ள யூபிஜிஎல் ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்த ரக ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.

    போர்

    போர்

    போா் மற்றும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் இது மிகவும் பயன்படும். இந்த புதிய ரக ஆயுதத்தை படைக்கலத் தொழிற்சாலை வாரியத் தலைவா் ஹரிமோகன் காணொலி காட்சி வாயிலாக கோல்கத்தாவிலிருந்து அறிமுகம் செய்தாா். வாரியத் துணைத் தலைவா்கள் சி.எஸ். விஸ்வகா்மா, ஏ.கே. ஜெயின், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பொதுமேலாளா் ஷிரிஷ் கரே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    English summary
    New type of weapon is being manufactured in Trichy Ordnance Factory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X