திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் என்ஐஏ சோதனை.. தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருந்ததாக இருவர் கைது.. கணினி, லேப் பறிமுதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை.. கணினி, லேப் பறிமுதல்

    திருச்சி: திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சர்புதீன் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    தீவிரவாத இயக்கத்தின் சமூக வலைதள பக்கத்துக்கு லைக் செய்ததாக சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். இன்று காலை 7 மணியளவில் தீவிரவாத இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து சர்புதீன் வீட்டில் சோதனை நடைபெற்றது.

    திருச்சி, தஞ்சையில் 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன். வேலைக்காக இவர் நாளை வெளிநாடு செல்ல இருந்தார். இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவையில் இருந்து 3 என்ஐஏ அதிகாரிகள் சர்புதீன் வீட்டுக்கு வந்தனர்.

     விசாரணை

    விசாரணை

    அப்போது வீட்டில் இருந்த சர்புதீன் மற்றும் குடும்பத்தினரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதையடுத்து சர்புதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

     தகவல் பரிமாற்றம்

    தகவல் பரிமாற்றம்

    முஸ்லிம் அமைப்பினரின் சமூகவலைதளங்களை கண்காணிப்பதற்காக எஸ்ஐயு என்ற பிரிவு உள்ளது. இந்த பிரிவு சர்புதீனின் வாட்ஸ்அப் தொடர்புகளை கண்காணித்த போது, அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தகவல் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

     நாளை வெளிநாடு

    நாளை வெளிநாடு

    இது தொடர்பாக இன்று விசாரணை நடந்து வருகிறது. மேலும் சர்புதீன் நாளை வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார். எனவே அல்கொய்தா அமைப்பினருக்கு ஏதேனும் தகவல் அல்லது பொருட்கள் கொண்டு செல்கிறாரா என்று விசாரணை நடந்து வருகிறது.

     விவரங்கள்

    விவரங்கள்

    வீட்டில் இருந்து கம்ப்யூட்டர்கள், செல்போன்கள்ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சென்று வந்த விவரம், இமெயில் விவரங்கள் ஆகியவற்றை திரட்டினர்.திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள சீனிவாசா நகர் இங்கு சர்புதீன் வயசு 30 தந்தை பெயர் அப்துல் நசீர்.

     தேசிய புலனாய்வு அதிகாரிகள்

    தேசிய புலனாய்வு அதிகாரிகள்

    சர்புதீன் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி கோவையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள்3 பேர் சர்புதீன் வீட்டில் விசாரணை நடைபெற்று வருகின்றன. முகநூலில் அல்கொய்தா இயக்கத்தின் பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட் அளித்து வந்துள்ளார் சர்புதீன் என தெரியவந்துள்ளது. சர்புதீன், ஜாபர் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

     திருச்சியில் பரபரப்பு

    திருச்சியில் பரபரப்பு

    திருச்சியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ஏற்கனவே இனாம்குளத்தூரில் ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எடமலைப்பட்டி புதூரில் சோதனை நடந்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனை

    சோதனை

    அதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் செருப்பு விற்பனை கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் இன்று காலை சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே சிமி தீவிரவாத அமைப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த இயக்கத்துடன் தொடர்பில் உள்ளாரா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    NIA officials searches Sarbuddin's house in Trichy Edamalaippatti Pudhur and arrested him in suspicious about link with terrorists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X