திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் பொண்ணு உடம்புல முக்கிய உறுப்பு காணோம்.. மூளைக்கு பதிலா துணி.. தண்டனை உறுதி.. ஜான்சிராணி ஆவேசம்!

சங்கீதா மரணம் குறித்து தாயார் ஆவேசமாக பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: "என் பொண்ணு உடம்பில் இருந்த முக்கிய உறுப்புகளை காணோம்.. மூளைக்கு பதிலாக துணியை வைத்து இருந்தனர்.. என் பொண்ணை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்" என்று நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சங்கீதாவின் அம்மா ஜான்சிராணி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளர்.

திருச்சி நவலூர்குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்த தம்பதி அர்ச்சுனன் - ஜான்சிராணி.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், கடைசி மகள்தான் சங்கீதா!

திருச்சியில் உள்ள தனியார் காலேஜில் படித்து வந்தார்.. போன 2006ம் வருஷம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு தியான வகுப்புக்கு ஜான்சிராணி சென்றார்.. போகும்போது கூடவே சங்கீதாவையும் அழைத்து சென்றார்.

ஜான்சிராணி

ஜான்சிராணி

அதுக்கப்புறம் சங்கீதா, நித்யானந்தா ஆசிரமத்திலேயே தங்கி இருந்து தியான வகுப்பில் படிப்பதாக சொன்னார். அதன்படியே ஜான்சிராணியும் விட்டுவிட்டு வந்தார். கடந்த 2014-ம் வருடம் திடீரன்று ஆசிரமத்தில் இருந்து ஒரு போன் ஜான்சிராணிக்கு வந்தது.. "உங்க பொண்ணுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.. அதுல அவர் இறந்துட்டார்" என்று சொல்லவும் ஜான்சிராணி அதிர்ச்சியில் கதறினார். இதற்கு பிறகு சங்கீதாவின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

விசாரணை

விசாரணை

என்றாலும், ஜான்சிராணியால் மகளின் சாவை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனால், சாவில் சந்தேகம் இருப்பதாக பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசாரும் திருச்சியில் புதைக்கப்பட்ட சங்கீதாவின் உடலை 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி திரும்பவும் தோண்டி எடுத்து மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.

சிபிஐ

சிபிஐ

ஆனால் என்னமோ தெரியவில்லை.. ராம்நகர் போலீசார் இந்த வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர்.. அதனால் ஜான்சிராணி பெங்களூரு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்... இது இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.. இதனிடையே ஜான்சிராணி தனது மகள் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பினார்.

கடிதம்

கடிதம்

அதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், "வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் இன்டர்போல் உதவியை நாட வேண்டும்" என்றும் கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

சித்ரவதை

சித்ரவதை

இது குறித்து ஜான்சிராணி சொல்லும்போது, "நித்யானந்தா ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் பல்வேறு சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்.. என் பொண்ணு மகள் சாவில் மர்மம் இருக்குன்னு சொல்லி நான் தந்த புகாரை பெங்களூரு ராம்நகர் போலீசில் நீண்ட போராட்டத்துக்கு அப்பறம்தான் ஏற்று கொண்டனர்.. மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் நடந்தபோது, என் பொண்ணு உடம்பில் இருந்த முக்கிய உறுப்புகள் மாயமாகி இருந்தன.. மூளைக்கு பதிலாக துணியை வைத்து இருந்ததும் தெரியவந்தது.

தண்டனை உறுதி

தண்டனை உறுதி

ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தும், ராம்நகர் போலீசார் மேல் நடவடிக்கை எதுவுமே எடுக்கவில்லை.. இப்போது சிபிஐ விசாரணை கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கு.. என் பொண்ணை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்" என்றார் கண்ணீர் மல்க!

English summary
samiyar nithyanandas ashram issue: trichy devotee Sangeetha murder issue case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X