திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி மாநகரம்.. 26 பேரும் குணமாகினர்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 26 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத நகராக மாறி உள்ளது திருச்சி மாநகரம்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் கரோனா தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உள்ளது.

மயிலாப்பூரை தொடர்ந்து மந்தைவெளியிலும் வேகம் எடுத்த கொரோனா.. ஒரே குடும்பத்தினர் 4 பேர் பாதிப்பு மயிலாப்பூரை தொடர்ந்து மந்தைவெளியிலும் வேகம் எடுத்த கொரோனா.. ஒரே குடும்பத்தினர் 4 பேர் பாதிப்பு

தினமும் அதிகரிப்பு

தினமும் அதிகரிப்பு

இங்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 51 போ் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 20 போ், கொரோனா நோய்த் தொற்றுடன் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், கடந்த 10- ஆம் தேதி ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து, முதல் நபராக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 16- ஆம் தேதி 32 பேரும், 21- ஆம் தேதி 6 பேரும், 23- ஆம் தேதி 7 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மொத்தம் 5 பேர்

மொத்தம் 5 பேர்

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அரியலூர் மாவட்டத்தினர் 2 பேர் என 5 பேர் முழு குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். இதுவரை திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து திருச்சி மாவட்டத்தினர் 42 பேர் உட்பட 51 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் திருச்சியைச் சேர்ந்த 1 வயது குழந்தை, 10 வயது சிறுவன், 78 வயது முதியவர் ஆகியோர் நலம் பெற்றுள்ளார்கள்.

கொரோனா இல்லாத திருச்சி

கொரோனா இல்லாத திருச்சி

இதற்கிடையில் திருச்சி மாநகரப் பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்றனர். இவர்கள் 23 பேர் ஏற்கனவே குணம் அடைந்த வீடு திரும்பினார்கள். இந்நிலையில் மேலும் 3 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால். கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய மாநகரமாக திருச்சி மாறி உள்ளது..

திருச்சி மாவட்டத்தினர் 6 பேர்

திருச்சி மாவட்டத்தினர் 6 பேர்

தற்போது திருச்சி மாவட்டத்தினர் 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தினர் 5 பேர், அரியலூர் மாவட்டத்தினர் 2பேர் , புதுக்கோட்டை மாவட்டத்தினர் ஒருவர் என 14 பேர் திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் தரமுடன் உயர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் , மருத்துவர்கள், செவிலியர்கள் கனிவோடு நடத்துவதாக குணமானவர்கள் தெரிவித்தனர். இதனால் தான் திருச்சியில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாவதாக கூறப்படுகிறது.

English summary
No active COVID-19 cases in trichy city, only 14 patients get treatment in trichy govt hospital for covid 19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X