திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜவாஹிருல்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஹைதர் அலியின் திருச்சி பொதுக்குழுவில் 'பரபர'!

Google Oneindia Tamil News

திருச்சி: தமமுக தலைவர் ஜவாஹிருல்லா மீது பொதுக்குழுவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக என அதன் பொதுச்செயலர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மீண்டும் பிளவுபட்டுள்ளது. சென்னையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஒரு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

No confidence motion against Jawahirullah, says Hyder Ali

இதில் பொதுச்செயலாளர் ஹைதர் அலியை பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் திருச்சியில் பொதுச்செயலாளர் ஹைதர் அலி தலைமையில் இன்னொரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது த.மு.மு.க.வின் வரலாற்றை விளக்கி பேசினார். மாநில செயலாளர் அவுலியா, உஸ்மான்கான் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

2021 தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி.. அதிமுக என்னவாகுமோ?- கராத்தே தியாகராஜன் 2021 தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி.. அதிமுக என்னவாகுமோ?- கராத்தே தியாகராஜன்

முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரஹமத்துல்லா நன்றி கூறினார். இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி கூறியதாவது:-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கஜா புயலில் வசூலிக்கப்பட்ட நிதிக்கான கணக்குகளை முறையாக கையாளாத பொருளாளர் ஷபியுல்லாகான் மீதும் ஒழுங்கு நடவடிக்கையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மீது முறையில்லாமல் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து, அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கஜா புயலில் வசூலிக்கப்பட்ட நிதிக்கான கணக்குகளை முறையாக கையாளாகாத பொருளாளர் ஷபியுல்லாகான் மீதும் ஒழுங்கு நடவடிக்கையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில துணைத்தலைவர் ஹமீது, மாநில செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதுடன், இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யும் அதிகாரத்தை பொதுச்செயலாளரான எனக்கு பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு ஹைதர் அலி தெரிவித்தார்.

English summary
TMMK General Secretary Hyder Alis said that their faction will bring no-confidence motion against President Jawahirullah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X