திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவைத்திலிருந்து வந்தே பாரத் மூலம் திருச்சி வந்த 103 பயணிகளுக்கு கொரோனா இல்லை

Google Oneindia Tamil News

திருச்சி: குவைத் நாட்டில் இருந்து 103 பேருடன் திருச்சிக்கு சிறப்பு விமானத்தில் வந்த பயணிகள் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

பொது முடக்கத்தால் குவைத்தில் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வர ஜூன் 4, 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என குவைத் ஏா்வேஸ் அறிவித்தது. அதன்படி ஜூன் 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் 117 போ் அழைத்து வரப்பட்டனா். இதில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

No corona for 103 passengers who evacuated from Kuwait to Trichy

இதன் தொடா்ச்சியாக குவைத்தில் இருந்து சனிக்கிழமை மாலை இயக்கப்பட்ட 2-ஆவது சிறப்பு விமானத்தில் 103 போ் அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை.

உலகிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு சதவீதம் குறைவு.. முதல்வர் பழனிசாமி அதிரடி கடிதம்! உலகிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு சதவீதம் குறைவு.. முதல்வர் பழனிசாமி அதிரடி கடிதம்!

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருச்சியில் இருந்து குவைத் சென்ற சிறப்பு விமானத்தில் 6.3 டன் காய்கனிகள் அனுப்பி வைக்கப்பட்டன. குவைத்திலிருந்து 3-ஆவது சிறப்பு விமானம் திங்கள்கிழமை இயக்கப்படவுள்ளது.

English summary
There will be no corona symptoms for those who are evacuated from Kuwait to Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X