திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குத்துக்காலிட்டு உட்கார்ந்து.. கொள்ளையடிக்கும் சைசை பார்த்தால் வட மாநில திருடர்களேதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cctv footage of lalitha Jewellery theft | லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள்

    திருச்சி: வெறும் சிக்னல்தான்.. பேச்சே இல்லை.. மர்மநபர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளை அடிப்பதை பார்த்தால், வடமாநில கொள்ளையர்களே லலிதா ஜூவல்லரி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஊர்ஜிதமாகிறது.

    100 கிலோ நகைகளை கொள்ளையடித்தது தொடர்பான 2 சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், 2 மர்மநபர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்படி உட்கார்வது இவர்களுக்கு எளிதாகவே இருக்கிறது. வடமாநில கொள்ளையர்கள்தான் இப்படி அமரக்கூடும் என்கிறார்கள்.

    பல நாள் திட்டமிட்டுதான், ஒரு குழுவாக சேர்ந்து இந்த கொள்ளைக்கு பிளான் போட்டுள்ளனர். இந்த கடைக்கு பக்கத்தில் ஒரு ஸ்கூல் உள்ளது. இப்போது காலாண்டு தேர்வு என்பதால், பகல், இரவு நேரங்களில் அங்கு நடமாட்டமே இல்லை. பள்ளியின் காலாண்டு தேர்வு லீவை கூட இவர்கள் கணக்கு போட்டுவைத்திருந்து இருக்கிறார்கள்.

    ஓட்டை வழியாக ஊர்ந்து.. நகைகளை அள்ளி போட்ட லலிதா ஜுவல்லரி திருடர்கள்.. பரபர சிசிடிவி காட்சிகள்!ஓட்டை வழியாக ஊர்ந்து.. நகைகளை அள்ளி போட்ட லலிதா ஜுவல்லரி திருடர்கள்.. பரபர சிசிடிவி காட்சிகள்!

     ஸ்கூல்

    ஸ்கூல்

    இந்த ஸ்கூல் வழியாகத்தான், இவர்கள் கடையின் பின்பக்க சுவரில் ஏசி மெஷின் பகுதிக்கு வந்துள்ளனர். ஆனால், இந்த ஸ்கூல் அருகே 10, 15 நாய்கள் எப்பவுமே ராத்திரி நேரங்களில் இருக்குமாம். ஆனால், இவர்கள் கொள்ளை அடிக்க வந்த நேரம், நல்ல மழை பெய்துள்ளது. அதனால் அந்த நாய்கள் எல்லாம் வேறு எங்கோ ஓடிவிட்டிருந்தன. இவர்களுக்கு இதுதான் சாதகமாக போய்விட்டது.

     சிக்னல்

    சிக்னல்

    மொத்தமாக கடையை சூறையாடிவிட்டு, யாராவது அந்த பகுதியில் வருகிறார்களா என்பதை நோட்டம் பார்த்துள்ளனர். இதற்கு கயிறு மூலமாகவே சிக்னலும் அனுப்பி உள்ளனர். கொள்ளை அடித்து முடிக்கும் வரை கப்-சிப் என்று இருந்திருக்கிறார்கள் இருவரும். வெளியில் இருந்தும் எந்த சத்தமும் கேட்கவில்லை. கொள்ளை முழுக்க வெறும் சிக்னல்தான்!

     வெல்டிங் மெஷின்

    வெல்டிங் மெஷின்

    ஒவ்வொரு பைகளாக வெளியே போகிறது. மொத்தமாக இப்படி 7 பைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவை கறுப்பு, சிவப்பு நிறங்களில் உள்ளன. கொள்ளையர்கள் கோவையில் கேஸ் வெல்டிங் மெஷின்களை ஆர்டர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வாடகைக்கும் எடுத்திருக்கிறார்கள். பொதுவாக வங்கியில் கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த உபகரணங்களை பயன்படுத்தப்படும்.

     பகீர் தகவல்

    பகீர் தகவல்

    இந்த கொள்ளையர்கள் ஜார்க்கண்ட்டில் இவர்கள் தேடப்பட்டவர்கள் கொள்ளையர்கள் என்றும் சொல்லப்படுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் இந்த கொள்ளையில் புது தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் வழக்கில் பகீர் தகவல்கள் நிறைய வெளியாகும் என்று தெரிகிறது.

    English summary
    Trichy Police conformed that North Indian robbers looted in Lalitha Jewellery and two cctv footage have released now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X