திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள பளக்கும் தங்கம்.. ஆனால் "அந்த" இடத்தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா!

திருச்சி ஏர்போர்ட்டில் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் தங்கம் கடத்தல் !

    திருச்சி: குருவின்னு சொல்றாங்க.. கொக்குன்னு சொல்றாங்க..ஆனா, திருச்சி ஏர்போர்ட்டில் மட்டும் தங்க கடத்தல்காரர்கள் நடமாட்டம் ஏன் இவ்வளவு அதிகமாகவே இருக்கிறது என்றே தெரியவில்லை. விடிய விடிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், 100 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.

    அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்.. இது நிறைய திருச்சி ஏர்போர்ட்டில் நடந்து வருகிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள்.

    எச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்புஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு

    ஏர்போர்ட்

    ஏர்போர்ட்

    நேற்றுகூட, திருச்சி ஏர்போர்ட்டில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஃபிளைட்களில் சிலர் தங்கம் கடத்தி வருகிறார்கள் என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஏர்போர்ட்டுக்கு விரைந்து வந்தனர். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டனர்.

     தங்கம் கடத்தல்

    தங்கம் கடத்தல்

    அப்போது மொத்தம் 100 பேர் மாட்டினார்கள்.. அவர்கள் கொண்டு வந்த பொருட்கள், அணிந்திருந்த உள்ளாடைகள், மலக்குடல் ஆகியவற்றில் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட 50 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோக எலக்ட்ரிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கத்தை கடத்தி வந்தவர்கள், அதனை வாங்க வந்தவர்கள், கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என இந்த 100 பேரை பிடித்து, பல மணி நேரமாக விசாரணை நடத்தினார்கள்.

    எனிமா

    எனிமா

    100 பேரில் 15 பேர், மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, எனிமா தந்து, அதற்கு பிறகு அவர்களிடமிருந்து அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி கடத்தி வந்தவர்களில் நிறைய பேர் கடத்தல் தொழிலில் ஈடுபடும் குருவிகள் என்கிறார்கள்.. ஒருசிலரை குருவிகளுக்கு ஏஜெண்டுகளாக செயல்படும் கொக்குகள் என்றும் சொல்கிறார்கள்.

    மூளை யார்?

    மூளை யார்?

    பிடிபட்ட இவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. அவர்களின் செல்போன்களும் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம், கேங் லீடர் யார், பின்னணி என்ன என்பதெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஆனால், ஒரேநாளில் இவ்வளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

    English summary
    officials seized 50 kg of-gold from more than hundred people in Trichy Airport and investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X