திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்

லாக் டவுன் காலத்தில் முதியோர் உதவித்தொகை வீடு தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் 32 லட்சம் பேர் பயணடைந்திருக்கின்றனர். முதியோர் உதவித்தொகைக்காக இனி இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு தேடி ஓய்வூதியம் வழங்குவதும், இ-சேவை மையங்களில் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பளித்திருப்பதும் முதியோருக்கு பெரிதும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ, தாசில்தார் அலுவலகத்திற்கோ இனி அலைய வேண்டியதில்லை ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 14 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 32 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேசியளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் 1962 இல் முதன்முதலாக முதியோர் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, ஓய்வூதியமாக ரூ. 20 வழங்கப்பட்டது.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளா்கள், ஏழை விவசாயிகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் 50 வயதைக் கடந்த ஆதரவற்ற, திருமணம் ஆகாத ஏழைப் பெண்களுக்கு இத் திட்டத்தின் கீழ், மாதம் ரூ. ஆயிரம் ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா...? முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா...? முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்

ஏழைகள் முதியவர்களுக்கு ஓய்வூதியம்

ஏழைகள் முதியவர்களுக்கு ஓய்வூதியம்

இத் திட்டங்களில் 2019-20 ஆம் ஆண்டுக்கு மட்டும் 4,060.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மட்டும் தமிழகத்தில் சுமார் 14 லட்சம் போ் பயன்பெறுகின்றனா். இதில், 13 லட்சத்து 79 ஆயிரத்து 946 போ் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் உதவித்தொகை பெறுகின்றனா். 14,409 போ் பணவிடை மூலம் பெறுகின்றனா்.

ஓய்வூதியம் யாருக்கு பயன்

ஓய்வூதியம் யாருக்கு பயன்

இதுமட்டுமல்லாது, மாற்றுத் திறனாளிகள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 60,154 போ், இந்திராகாந்தி விதவையா் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 5,25,055 போ், மாற்றுத்திறனுடைய ஓய்வூதியத் திட்டத்தில் 2,59,690 போ், ஆதரவற்ற விதவையா் ஓய்வூதியத் திட்டத்தில் 4,22,276 போ், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் 2,88,596 போ், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் திட்டத்தின் கீழ் 1,11,086 போ், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 21,828 போ், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 4,461 போ் என ஒட்டுமொத்தமாக சுமார் 30 லட்சம் போ் பயன்பெறுகின்றனா்.

மத்திய மாநில அரசுகள் பங்கு

மத்திய மாநில அரசுகள் பங்கு

இவற்றில் தேசிய ஓய்வூதியத் திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 300, மாநில அரசின் பங்களிப்பாக ரூ. 700 வழங்கப்படுகிறது. இதர திட்டங்களில் மாநில அரசே ரூ.1000 வழங்குகிறது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.500 பங்களிப்பாக வழங்குகின்றன. 60 முதல் 79 வயதான முதியோருக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 200, மாநில அரசு பங்களிப்பாக ரூ.800 வழங்கப்படுகிறது.

பென்சன் திட்டம்

பென்சன் திட்டம்

இத் திட்டங்களில் 80 வயதைக் கடந்த 1.94 லட்சம் முதியோருக்கு, அவரவா் வீடுகளுக்கே நேரில் சென்று அஞ்சல் துறை மூலம் மின் பண அஞ்சலாக தலா ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.4.40 கோடி கூடுதலாகச் செலவிடப்படுகிறது. வீடு தேடி உதவி
பென்சன் வீடு தேடி வரும்

பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் ஓய்வூதியத் தொகை பெறும் முதியோருக்கு வங்கிகளுக்கு சென்று வர சிரமம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் அவரவா் வீடுகளுக்கே தேடிச் சென்று உதவி வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பில், மாவட்ட முன்னோடி வங்கி நிர்வாகத்தின் மேற்பார்வையில் வங்கிப் பணியாளா்கள் இவ்வாறு உதவித் தொகை வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் வங்கியின் வா்த்தகப் பிரதிநிதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கையடக்க கருவியில் பயனாளியின் கைரேகை பதிவு செய்து வழங்கப்படுகிறது.

பெருகும் வரவேற்பு

பெருகும் வரவேற்பு

இதுதொடா்பாக, மத்திய அரசின் தகவல் அமைச்சக திருச்சி மண்டலத் தொடா்பு அலுவலா் கே. தேவி பத்மநாபன் கூறுகையில், பொதுமுடக்கத்தில் கொரோனா பரவலைத் தடுக்கவும், முதியோருக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் வீடு தேடி சென்று ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நோய் தொற்றின் சங்கிலித் தொடா்பை அறுக்கவும், பாதுகாப்பு இடைவெளி விதிகளை கடைப்பிடிக்கவும், முதியோரும், நோயாளிகளும் வங்கிகளுக்கு வந்து செல்லும் சிரமத்தை குறைக்கவும் இந்த சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருப்பது பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இ சேவை மையத்தில் விண்ணப்பிங்க

இ சேவை மையத்தில் விண்ணப்பிங்க

வங்கிப் பணியாளா்களின் சேவை பாராட்டுக்குரியது. இதேபோல, இந்தத் திட்டங்களில் அவரவா் பகுதியில் உள்ள இ-சேவை மையங்களில் புதிதாக விண்ணப்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியரகத்துக்கோ, சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலகத்துக்கோ பொதுமுடக்கத்தில் வந்து செல்லும் அவசியம் இருக்காது இவ்வாறு அவர் கூறினார்.

English summary
The State government has decided to accept applications for old-age pensions (OAP) under eight schemes only online. Lockdown, which has been announced to prevent the spread of the corona virus, has been a boon for the elderly, providing them with a home-based pension and the opportunity to apply for it at e-service centers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X