• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்!

|

திருச்சி : உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையால் எதிர்கட்சிகளுக்கு எந்த பயமுமில்லை. தமிழகத்தில் பா.ஜ.க என்கிற கட்சி தேவையில்லை, அவர்கள் செய்ய விரும்புவதை தற்போது அ.தி.மு.க செய்து வருகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க விற்கு தற்போது இருக்கும் கொஞ்சம் வாக்குகளையும் அமித்ஷாவின் பேச்சை கேட்டால் அ.தி.மு.க இழக்க் நேரிடும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் எச்சரித்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 21.11.2020 சனிக்கிழமை காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள்பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். அவற்றை இப்போது பார்ப்போம்.

பல சந்திப்புகள்.. வந்த வேலை முடிந்தது.. டெல்லி புறப்பட்டு சென்றார் அமித்ஷா!

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள்

கேள்வி ; மருத்துவ கவுன்சிலிங் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது என்று குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன

பதில்; அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது மற்ற மாணவர்களின் சம வாய்ப்பை பறிப்பது போன்றது.எனவே அனைத்து மாணவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்பில் சேர்ந்து கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும்.

உதயநிதிக்கு வரவேற்பு

உதயநிதிக்கு வரவேற்பு

கேள்வி: தி.மு.க. இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்களே அதற்கு நீங்கள் சொல்வது

பதில்: உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தற்போது தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது தி.மு.க விற்கு மக்களிடையே ஆதரவை அதிகரிக்கும்.உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் கலந்துகொண்ட கூட்டத்தில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அது குறித்து ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தடுப்பதால் திமுகவிற்கு தான் ஆதரவு பெருகும். அதிமுக அடாவடி தினத்திற்கு எதிராக வெறுப்பு உண்டாகும்.

எட்டு தொகுதிகள்

எட்டு தொகுதிகள்

கேள்வி : வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் கிற்கு எத்தனை தொகுதிகள் கேட்க போகிறீர்கள்.

பதில்: சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து அதன் பின்னர் தி.மு.க வுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். தி.மு.க. கூட்டணியில் எபபொழுதும் நிலை நிற்கும் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணயில் குறைந்த பட்சம் எட்டு தொகுதிகள் வாய்ப்பு உள்ள தொகுதிகளில் பெற்று அவற்றில் வெற்றி பெறுவதின் மூலம் கேரளாவை அடுத்து தமிழ்நாட்டிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரிக்கப்பட்ட கட்சியாக மற்றுவதற்கு முஸ்லிம் லீக் மாநில தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். தி.மு.க உடன் முஸ்லீம் லீக் கூட்டணி என்பது வெறும் தேர்தல் நேர கூட்டணி மட்டுமல்ல,அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி.தி.மு.க வும் எங்களை வெளியே விடமாட்டார்கள்,நாங்கள் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேற மாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் எங்களுக்கு இல்லை, எங்களது கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி அவர்களும் எங்களை விடுவதாக இல்லை.

காங்கிரஸ் தோற்க காரணம்

காங்கிரஸ் தோற்க காரணம்

கேள்வி: பீகாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஒவைஸி கட்சி தான் காரணம் சொல்லப்படுகிறதே

பதில்: பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தான் காரணம் என கூறுவது ஏற்புடையதல்ல. 32 மாவட்டங்களாப் பிரிக்கப்பட்டுள்ள பீகாரில் முஸ்லிம்கள் குவியலாக வாழும் பகுதி ' சீமாச்சல ' என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கிஷன்கன்ஜ் மாவட்டத்தில் மட்டும் 68 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். முஸ்லிம்கள் குவியலாக வாழும் ' சீமாச்சல ' பகுதி, பீகாரின் எல்லையை ஒட்டியுள்ள பங்களாதேசம் மற்றும் நேபாள ஆகிய நாடுகளின் எல்லைக் கோடுகளின் அருகில் இருக்கிறது. 243 சட்டமன்ற தொகுதிகளில் உவைஸி கட்சி போட்டியிட்டது 20 தொகுதி மட்டுமே அவற்றுள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள தொகுதிகளில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறவில்லை. இவர்கள் பெற்றுள்ள வாக்குகளால் பா.ஜ.க. - நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற்றும் விடவில்லை. உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோற்று போய்விடவும் இல்லை. தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் கணிசமான வாக்குகளை, வென்ற ஜந்து தொகுதிகளைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெறவில்லை. உவைஸி கட்சியினர் தோற்றுள்ள தொகுதிகளில் வென்றவர்கள் 40, 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். எம் ஐ எம் வென்ற சீமாச்சல் பகுதியில் உள்ள ஜந்து தொகுதிகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இப்பகுதி மக்களை ஆளும் அரசு, ஒரு பொருட்டாகவே கருவதுதில்லை.

தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை பீகார் மாநில இ.யூ.மு. லீக் கிளையினர் தெரிவித்தனர். அங்குள்ள அரசியல் நிலவரத்தை கணித்த இ.யூ.மு லீக் போட்டியிடுவதில்லை எனவும் , பாஸிஸ எதிர்ப்புக்கு ஒன்றிணைந்துள்ள ஜனநாயக சமயச் சார்பற்ற அரசியல் சக்திகளுக்கு இ.யூ மு லீகினர் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எந்த பயமும் இல்லை

எந்த பயமும் இல்லை

கேள்வி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் அரசியல் மாற்றம் எதுவும் நடக்குமா

பதில் : உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையால் எதிர்கட்சிகளுக்கு எந்த பயமுமில்லை. தமிழகத்தில் பா.ஜ.க என்கிற கட்சி தேவையில்லை, அவர்கள் செய்ய விரும்புவதை தற்போது அ.தி.மு.க செய்து வருகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க விற்கு தற்போது இருக்கும் கொஞ்சம் வாக்குகளையும் அமித்ஷாவின் பேச்சை கேட்டால் அ.தி.மு.க இழக்க் நேரிடும். அமித்ஷாவை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு எந்தவித பயமுமில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக தேவையில்லை. பாஜக செய்ய வேண்டிய வேலையை அதிமுக செய்து வருகிறது. அதிமுகவே ஒரு பாஜகதான். அதிமுக வாக்குகளை பெற வேண்டுமென்றால், தொடர்ந்து அமித்ஷா பேச்சை கேட்க கூடாது.

காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் அமைத்துள்ள குழுவை வரவேற்பதாகவும், மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி தலைமையை வலுப்பெறச் செய்யும் வகையில் நிலைநாட்டினால் கட்சி வளரும், இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸை அழிக்க முடியாது இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசினார்.

 
 
 
English summary
Indian Union Muslim League (IUML) political party leader K. M. Kader Mohideen said that Opposition parties have no fear of Amit Shah's visit to Tamil Nadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X