திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார், தேர்தல் அதிகாரிகள்.. துணை ராணுவ படையினரும் குவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார்,தேர்தல் அதிகாரிகள்- வீடியோ

    திருச்சி : திருச்சி வந்த துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை தொடங்கினர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து 85 பேர் நேற்று முன்தினம் ரயிலில் திருச்சி வந்தனர்.

    Paramilitary forces are deployed in Trichy for vehicle check up

    கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் தங்கி உள்ள துணை ராணுவ படையினருக்கு நேற்று முதல் பணி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்களது பாதுகாப்புப் பணியை துணை ராணுவ படையினர் தொடங்கினர்.

    கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் துணை ராணுவ படையினர் பிராட்டியூர், கருமண்டபம் பகுதியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர்.

    <strong>EXCLUSIVE:</strong> EXCLUSIVE: "மாமா மை ஊத்துங்க.." நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

    அப்போது, அந்தப் பகுதியில் துணை ராணுவ படையினர் வரிசையாக துப்பாக்கிகளை ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
    இதேபோல பொன்மலை, அரியமங்கலம், விமானநிலையம் பகுதிகளில் நேற்று மாலை துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    திருச்சி மாநகரில் போலீஸார், தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துணை ராணுவ படையினரும் கூடுதலாக வாகன சோதனையில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    மாநகரில் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் பெரியமிளகுபாறை சந்திப்பு ரோட்டில் துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். துணை ராணுவ படையினர் நவீன துப்பாக்கிகளுடன் நின்று வாகன சோதனை மேற்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Paramilitary forces are deployed in Trichy to do vehicle check up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X