திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக நிர்மலா தேவி தலையை வெட்டிய கும்பல் நீதிமன்றத்தில் சரண்

Google Oneindia Tamil News

திருச்சி: பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண்ணை தலை துண்டித்து கொலை செய்த கொலையாளிகள் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Recommended Video

    பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக நிர்மலா தேவி தலையை வெட்டிய கும்பல் நீதிமன்றத்தில் சரண்திருச்சி:

    தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி , நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

     'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது 'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது

    பழிக்கு பழி

    பழிக்கு பழி

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    நிர்மலா

    நிர்மலா

    பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    பெண் கொலை

    பெண் கொலை

    இந்த நிலையில் நிர்மலா 2 தினங்கள் முன்பு, திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி காலனி ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நிர்மலாவை சரமாரியாக கொண்டு வெட்டி கொலை செய்து அவரது தலையை மட்டும் துண்டித்து
    தலையை பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டின் அருகே இருந்த பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று விட்டனர்.

    விசாரணை

    விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

    கொலையாளிகள் சரண்

    கொலையாளிகள் சரண்

    இதனிடையே கொலையில் ஈடுபட்ட அலெக்ஸ் பாண்டியன், சங்கிலிமுத்து, ரமேஷ்குமார், தமிழ்ச்செல்வம், முத்துமணி ஆகிய 5 பேர் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் 4ல் சரணடைந்தனர். குற்றவியல் நீதிபதி குமார் இவர்கள் 5 பேருக்கும் 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஐந்து பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு திருச்சி மாவட்டம், முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.

    English summary
    Pasupathi Pandian supporters who beheaded Nirmala Devi, surrendered in a Trichy court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X