திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்ததால் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

    தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி குவிந்த மக்கள் கூட்டம் - வீடியோ

    தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, நந்திக் கோவில் தெரு, என்.எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகள், இனிப்பகங்கள், நகை கடைகள் வார நாட்களில் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    நரம்புகளை முறுக்கேற்றும் பேச்சால்... லட்சக்கணக்கான தம்பிகளின் அண்ணனான சீமான்...!நரம்புகளை முறுக்கேற்றும் பேச்சால்... லட்சக்கணக்கான தம்பிகளின் அண்ணனான சீமான்...!

    தீபாவளி பண்டிகை

    தீபாவளி பண்டிகை

    தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்த வண்ணம் உள்ளனர். திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பகுதிகளில் கடல் அலை போன்று மனித தலைகளை காணமுடிந்தது.

    கண்காணிப்பு கேமராக்கள்

    கண்காணிப்பு கேமராக்கள்

    எனவே கூட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் 127 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துப்பட்டு காவல் துறையினர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புற காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு பணி

    பாதுகாப்பு பணி

    அந்த பகுதி முழுவதும் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சுற்றி 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    தீபாவளி காலங்கள்

    தீபாவளி காலங்கள்

    பொதுவாகவே தீபாவளி காலங்களில் இந்தப் பகுதிகள் மக்கள் கூட்டங்களால் அலைமோதும். இருந்த போதும் தற்போது உள்ள சூழலில் கொரோனா காரணமாக அதிக அளவு மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தினால் கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தின் காரணமாக கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்துள்ளனர்.

    English summary
    People gathered in Trichy to buy new clothes, jewels ahead of Diwali celebrations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X