திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க. ஸ்டாலின் முதல்வரானால் பேரறிவாளன் விடுதலை சாத்தியம்... சொல்வது ஆர். எஸ். பாரதி எம்.பி

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வரானால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியம் தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை என்று திருச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம

Google Oneindia Tamil News

திருச்சி: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி கூறியுள்ளார். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவிற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் திருச்சியில் பேசிய ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட திமுக வழக்கறிஞா்கள் அணிக்கான களப்பணி அலுவலகத் திறப்பு விழாவுக்கு, திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு தலைமை வகித்தாா். அலுவலகத்தைத் திறந்து வைத்த தி.மு.க. அமைப்பு செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ஆா்.எஸ். பாரதி செய்தியாளரிடம் பேசினார்.

Peraivalan release possible after MK Stalin Chief Minister says R. S. Bharathi MP

தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தி.மு.க விற்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை. பல தேர்தலை சந்தித்தவர்களுக்கும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது. எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

கமல், தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது. தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர். இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம்.

வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம்.
மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும். மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.

பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள். அது குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளது. விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசால் எதுவும் செய்ய முடியாது. இதேபோல பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலையிலும் எதுவும் செய்ய முடியாது.

மு.க. ஸ்டாலின் முதல்வரானால் மட்டுமே 7 போ் விடுதலை சாத்தியமாகும். வரும் தோ்தலில் திமுக வெற்றி பெறும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் மாநிலத்தில் ஆட்சி செய்வோம். மத்தியில் இருப்போரோடு கூட்டாட்சி செய்ய அறிவுக் கூா்மை இருந்தால் போதும்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளைச் சோ்ப்பது குறித்து திமுக தலைவா் ஸ்டாலின்தான் முடிவெடுப்பாா். சசிகலாவின் கணவா் நடராஜன் திமுகவிலிருந்து உருவானவா். தற்போது, திமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த உறவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ். பாரதி.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், வழக்குரைஞா்கள் பிரிவு நிா்வாகிகள் ஓம் பிரகாஷ்,பாஸ்கா், அந்தோணிராஜ், தினகரன், தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

English summary
R.S Bharathi MP, said DMK leader M.K. Stalin is the chief minister but the possibility of the release of seven people, including Perarivalan. He also said that there was no connection between Sasikala and DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X