திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதாங்க அவர் ஸ்பெஷலே.. மிரள வைக்கும் மஞ்சுளா.. சொன்ன தகவலை கேட்டு ஆடிப் போன போலீஸ்!

முருகன் மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    murugans wife manjula confessed to trichy police| போலீசிடம் முருகன் மனைவி கொடுத்த தகவல்

    திருச்சி: "தண்ணீர் பிடிச்சு வெக்கும் டிரம்-மில்தான் பணத்தை ரொப்பி வைப்பார்... கொள்ளையடிச்ச நகைகளை என்கிட்ட தர மாட்டார்.. எல்லாத்தையும் புதைச்சிதான் வெப்பார்.. இதான் அவர் ஸ்பெஷாலிட்டியே" என்று அதிர வைக்கிறார் கேங் லீடர் முருகன் மனைவி மஞ்சுளா!

    நகைக்கடையில் ஓட்டையை போட்டு, ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மணிகண்டனுடன் பைக்கில் வந்து தப்பியோடிய சுரேஷ் பின்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். முக்கிய குற்றவாளியான முருகனும் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தனர்.

    கொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்கொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

    பறிமுதல்

    பறிமுதல்

    இப்போது, இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மஞ்சுளா

    மஞ்சுளா

    இந்த நிலையில் திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்காக மஞ்சுளாவை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தகவல்

    தகவல்

    இந்த விசாரணையில் மஞ்சுளா நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். அவைகளை போலீசார் தெரிவித்ததாக ஒரு வார இதழும் அத்தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மஞ்சுளா சொல்லி உள்ளதாவது: "கொள்ளையடிச்ச நகைகளை அவர் யார்கிட்டயும் கையில் தர மாட்டார். அவைகளை மண்ணுக்கு அடியில் புதைச்சுதான் வெப்பார். இதுதான் அவர் ஸ்டைல். ஆனா, எங்கே புதைக்கிறார், எப்ப புதைக்கிறார், எப்போது எடுக்கிறார்.. இதெல்லாம் என்கிட்ட கூட சொல்ல மாட்டார். அவருக்கு மட்டும்தான் தெரியும்.

    ராசியான டிரம்

    ராசியான டிரம்

    எப்போ தேவையோ, அப்போ புதைத்த நகைகளை வெளியே தோண்டி எடுத்து பணமா மாத்திடுவார். அந்த பணத்தையும் என்கிட்ட தர மாட்டார். தண்ணி பிடிச்சி வைக்கும் டிரம்மில்தான் நிரப்பி வைத்திருப்பார். அது ஒரு ராசியான டிரம்... அந்த டிரம்மில்தான் பணத்தை கொட்டி வைப்பார்.

    கடவுள் பக்தி

    கடவுள் பக்தி

    எனக்கு சின்ன வயசில் இருந்தே கடவுள் பக்தி அதிகம். இவர் இப்படி திருட்டு தொழிலில் இறங்கவும், நிறைய கோயிலுக்கு போக ஆரம்பிச்சேன். கொள்ளை அடிக்க எந்த ஊருக்கு போனாலும் அங்க இருக்கிற கோயில்களுக்கு போவேன், அவரையும் கூடவே கூப்பிட்டு போவேன்.. கூப்பிட்ட கோயில்களுக்கு என்கூடவே வருவார். மத்தபடி வேற எதுவும் எனக்கு தெரியாது" என்றார். எனினும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    gang leader murugans wife manjula confessed to trichy police about lalitha jewellery theft case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X