• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திகட்டும் ஆபாசம்! செக் வைத்த சைபர் கிரைம் போலீஸ்! கையெடுத்து கும்பிட்ட திருச்சி சாதனா! சோக வீடியோ!

Google Oneindia Tamil News

திருச்சி : டிக்டாக்கில் பிரபலமாகி தற்போது இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்கில் லைவ்வில் ஆபாசமான செய்கைகள் மற்றும் அசிங்காக பேசி வரும் திருச்சி சாதனா குறித்த புகார்கள் வந்ததால், காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இனிமேல் ஆபாசமாக பேசி நடிக்க மாட்டேன் என கையெடுத்து கும்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

  Trichy Sadhana-வுக்கு Police Warning | Oneindia Tamil

  கொரோனா காலத்திற்கு முன்பாக மியூசிக்கலி டிக்-டாக்ஆக மாறிய போது ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து வரிசையில் சமூக வலைதளவாசிகளிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் திருச்சி சாதனா.

  ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பு நடனம் காமெடி என கலக்கி வந்த அவர் நாட்கள் செல்ல செல்ல ஆபாச பாதைக்கு மாறினார். தொடர்ந்து அரைகுறை ஆடையுடன், இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள் பேசி பிரபலமானார்.

  டபுள் மீனிங் டயலாக்.. முக்கல் முனகல் பாட்டுகள்.. டிக்டாக்கில் விளையாடும் எஸ்ஐ.. அதுவும் டூட்டியிலேயேடபுள் மீனிங் டயலாக்.. முக்கல் முனகல் பாட்டுகள்.. டிக்டாக்கில் விளையாடும் எஸ்ஐ.. அதுவும் டூட்டியிலேயே

  திருச்சி சாதனா

  திருச்சி சாதனா

  சொல்லப்போனால் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றவர்களின் ஆபாச நடவடிக்கைகள் காரணமாகவே டிக் டாக் தடை செய்யப்படும் நிலைமைக்கு போனது. அந்த அளவுக்கு சினிமா கவர்ச்சி நடிகைகளுக்கே டிப்ஸ் கொடுக்கும் வகையில் மிகவும் ஆபாசமாக நடன அசைவுகளை செய்து வந்தனர். இவர்களோடு சேர்ந்து இலக்கியா என்பவரும் இணைந்து கொள்ள அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.

  குமட்டும் ஆபாசம்

  குமட்டும் ஆபாசம்

  டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் யூடியூப் சேனல் என ஆரம்பித்து திருச்சி சாதனா அதன் பிறகு மேலும் தனது ஆபாச நடவடிக்கைகளை அதிகப்படுத்தினார் இரவு நேரங்களில் அரைகுறை ஆடைகளுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு யூட்யூபில் லைவ்வில் சென்று பலரின் தூக்கத்தை கெடுத்தவர் திருச்சி சாதனா.

  லைவ் பரிதாபங்கள்

  லைவ் பரிதாபங்கள்

  லைவ் வில் கமென்ட்ஸ் செய்பவர்களுடன் மிகவும் ஆபாசமாக பேசுவது, காலையில் பல் விளக்குவது முதல் இரவில் தூங்கச் செல்வது வரை லைவ்லேயே வாழ்வது என பல அட்ராசிட்டி கள் செய்து வந்தார். அடுத்ததாக சில பல யூடியூப் சேனல்கள் உடன் சேர்ந்து கொண்டு பிராங்க் என்ற பெயரில் 18+ கண்டெண்ட்களை கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டெறும்பு என்ற யூடியூப் சேனலில் கிப்ட் பிரான்க் என்ற பெயரில் இவர்கள் அடித்த லூட்டி சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

  போலீசார் சம்மன்

  போலீசார் சம்மன்

  கெட்ட வார்த்தைகள் பேசுவது, விளக்குமாறு எடுத்து அடிப்பது, செருப்பை எடுத்து துரத்துவது என இவர்கள் செய்த அட்ராசிட்டி குறித்து முகம் சுளித்த சமூக வலைதளவாசிகள் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர், ஒருவர் இருவர் அல்ல கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து திருச்சி சாதனாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  மன்னிப்பு கேட்டார்.

  மன்னிப்பு கேட்டார்.

  அதில் தங்கள் மீது ஆபாச செய்கைகள் செய்வதாக புகார்கள் வந்துள்ளது உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு போலீசார் மெமோ அனுப்பியுள்ளனர். இதனால் பயந்துபோன திருச்சி சாதனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிமேல் ஆபாசமாகப் பேசியும் நடித்தும் வீடியோக்கள் போட மாட்டேன் எனவும், யூட்யூபர்கள் தனது பழைய வீடியோக்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு அடுத்ததாக மாஸ்க் அணிந்தவாறு மிகவும் பவ்யமாக வெளியிட்டுள்ள ரீலில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  The video has been released after the police sent a notice following complaints about Trichy Sadhana, who has become popular on DickTalk and is currently speaking live on Facebook and talking obscenely.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X