திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்!

கார் விபத்தில் சிக்கியவரை மீட்டுள்ளார் காவலர் கணேஷ்

Google Oneindia Tamil News

திருச்சி: "டிரைவர் இல்லையா.. பரவாயில்லை, சாவியை மட்டும் குடுங்க" என்று கேட்டு.. ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் கணேஷ்.. மனிதநேயம் தழைக்கும் இந்த சம்பவத்தையடுத்து கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள பகுதி புளியவலசு. இங்கு வசித்து வரும் தம்பதி தியாகராஜன் - சாந்தி.. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மாருதி காரில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றார்கள்.

policeman ganesh rescued injured man near trichy

தரிசனம் முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது, கரூர் சாலை புளியம்பட்டி பிரிவு அருகே கார் வந்தது.. அதே சமயம் மற்றொரு காரும் எதிரில் வந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள், கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறினார்.. இதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்தனர்.. தியாகராஜனின் கால்களை மீட்க போராடினர்.

6 வயது சிறுமியை.. கை காலை கட்டி.. பலாத்காரம் செய்து கொன்ற.. சந்தோஷ்குமாருக்கு.. தூக்கு தண்டனை! 6 வயது சிறுமியை.. கை காலை கட்டி.. பலாத்காரம் செய்து கொன்ற.. சந்தோஷ்குமாருக்கு.. தூக்கு தண்டனை!

அந்த சமயத்தில்தான் மூலனூர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் கணேஷ் வந்தார்.. அவரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.

அதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக சென்றார் கணேஷ்.. அப்போது "ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை" என்றார்கள்.. "பரவாயில்லை நானே ஓட்டுகிறேன், சாவியை மட்டும் குடுங்க" என்று சொல்லி வாங்கி உள்ளார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை, அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இப்போது தியாகராஜனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து.. அசுர வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஆனால், தியாகராஜனை மீட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்வரை கணேஷ் ஒரு போலீஸ்காரர் என்றே யாருக்குமே தெரியாதாம்!

English summary
car, omni accident near trichy, and policeman ganesh rescued heavily injured man
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X