திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்

Google Oneindia Tamil News

திருச்சி: திமுக-காங். எம்.பி.க்கள் 37பேரும் தங்கள் சொத்துகளை விற்று குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் விவசாயக்கடன் மற்றும் கல்விக்கடன்களை 37 எம்.பி.க்களும் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 38 இடங்களில் 37 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக (தேனியில் மட்டும்) ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

pon radhakrishnan urgus dmk congress mps must sell the assets for solve water problem

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அண்மைக்காலமாக குடிநீர் பிரச்னை குறித்து பெரிய அளவில் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாய கடன் தள்ளுபடி செயயப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தனர்.

காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக மற்றம் காங்கிரஸ் எம்.பி.க்கள் 37 பேரும்.. தங்கள் சொத்துகளை விற்று குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று விமர்சித்தார். இதேபோல் தமிழகத்தில் கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களையும் சொத்துக்களை விற்று 37 எம்.பி.க்களும் செலுத்த வேண்டும் என்றும் கோபமாக தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் மதவாத அரசியல் செய்தும் மக்களிடையே பொய் பிரசாரம் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாக வேதனை தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன், இன்னும் எத்தனை ஆண்டுகாலம் மக்கள் ஏமாளிகளாக இருக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

English summary
bjp leader and ex minister pon radhakrishnan urgus dmk congress mps must sell the assets for solve water problem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X