திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர்வரத்து... 1000 கனஅடி நீர் வெளியேற்றம்!

    திருச்சி: மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணியில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடியாகும்.

    தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி விட்டது. மேட்டூர் அணையில் இருந்து உருவாகும் காவிரி ஆறு ஈரோடு, கரூர் வழியாக மாயனூர் தடுப்பணையை அடைந்து அங்கிருந்து காவிரி ஆறு திருச்சி முக்கொம்பு மேலணை வரை அகன்ற காவிரியாக செல்கிறது.

    ஜீவநதி

    ஜீவநதி

    முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாக பிரிந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க உதவும் ஜீவ நதியாகவும் உள்ளது.

    கொள்ளிடம் கதவணை

    கொள்ளிடம் கதவணை

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆகஸ்டு 22-ந்தேதி இரவு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலையில் கொள்ளிடம் கதவணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் ரூ.38 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக பலப்படுத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    தூண்கள்

    தூண்கள்

    அடுத்ததாக, உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் கீழ் பகுதியில் 75 மீட்டர் தொலைவில் புதிய கதவணை ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான 484 தூண்களில் 71 தூண்களை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது.

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இந்த தூண்கள் ஒவ்வொன்றும் 15 முதல் 18 மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த தூண்களில் தண்ணீரினால் அரிப்பு ஏற்படாமல் இருக்க ‘எப்பாக்சி' என்ற தொழில் நுட்பத்தில் பணிகள் நடந்து வருகின்றன.

    பொதுப் பணித் துறை

    பொதுப் பணித் துறை

    புதிய கதவணையின் மொத்த நீளம் 630 மீட்டர் ஆகும். அணையின் மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படும். கட்டுமான பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, தொடர்ந்து காவிரியில் தண்ணீர் வந்தால், திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணி பாதிக்கப்படும் என்றும் மீண்டும் ஒரு பெரிய அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்படவிருப்பதாக விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

    2 லட்சம் கனஅடி

    2 லட்சம் கனஅடி

    இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கர் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு தற்போது கபினி அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    விவசாய தேவை

    விவசாய தேவை

    மேலும் மேட்டூர் அணையில் விவசாய பாசன தேவைக்காக வினாடிக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்ற தகவல் உள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணியில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் முக்கொம்பு காவிரி ஆற்றில்தான் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    தண்ணீர்

    தண்ணீர்

    கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூரில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. அப்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படும்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கரும்பு சாகுபடி

    கரும்பு சாகுபடி

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "கர்நாடகாவில் மழை அதிகமாக இருப்பதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை சாகுபடிக்கும் பாசன வசதி கிடைக்கும்.

    கொள்ளிடம் அணை

    கொள்ளிடம் அணை

    இதற்காக மாவட்டத்தில் உள்ள 17 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் பாய்ந்தோடி கடைமடைக்கு செல்ல வழியை ஏற்படுத்த வேண்டும். முக்கொம்பு மேலணைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ள கொரம்பை பலப்படுத்த வேண்டும். மேலும் கொள்ளிடம் அணையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    கண்காணிப்பு பணி

    கண்காணிப்பு பணி

    காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக தடுப்புகளை உடைத்தெறிந்து தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது. தண்ணீர் வருவதற்குள் தற்காலிக தடுப்புகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கொம்பு மேலணையில் 24 மணி நேரம் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்" என்றார்.

    English summary
    Public Works Department says that that there will be no issue in building new check dams across Kollidam river.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X