திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 அடி நீளம்.. சரசரவென வந்த மலைப்பாம்பு.. பிடிக்க முயன்ற போது நடந்த அதிர்ச்சி

Google Oneindia Tamil News

திருச்சி: துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புப் பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. முன்னதாக பிடிக்க முயன்ற தீயணைப்பு வீரரை பாம்பு கடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவலா் குடியிருப்புக்கு அருகிலுள்ள சின்னச் செட்டிக்குளத் தெருவில் வசித்து வருபவா் உமா் (65). இவரது வீட்டின் பின்பகுதியிலுள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதியினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்களுக்குத் தகவல் தெரிவித்தனா்.

python snake caught in Tuvarankurichi police quarters near Trichy

தகவலின் பேரில் அங்கு சென்ற நிலைய அலுவலா் மாதவன் தலைமையிலான வீரா்கள், சுமார் 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனா். அப்போது வீரா் நாகேந்திரன் கையில் பாம்பு கடித்துள்ளது.

24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரம் பயணித்த மாணவன்.. 10 நிமிட லேட்டால் நீட் தேர்வு எழுத முடியாத நிலை 24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரம் பயணித்த மாணவன்.. 10 நிமிட லேட்டால் நீட் தேர்வு எழுத முடியாத நிலை

இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பச்சமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

English summary
A 10 feet long pythonsnake was caught entering the Trichy Tuvarankurichi police quarters The snake bit the firefighter who tried to catch him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X