திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லலிதா கொள்ளையை தொடர்ந்து அடுத்த சம்பவம்.. பெல் கூட்டுறவு வங்கியில் கொள்ளை.. ரூ.1.50 கோடி அபேஸ்!

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளைக்கு பின் பலர் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. திருநாவுக்கரசு, சபரி மீதான குண்டாஸ் நீக்கம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவுபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. திருநாவுக்கரசு, சபரி மீதான குண்டாஸ் நீக்கம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு

எல்லோரும் கைது

எல்லோரும் கைது

இந்த கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகன் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு முருகன் உட்பட இந்த கொள்ளை கும்பலில் இருந்த எல்லோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருச்சி கொள்ளை

திருச்சி கொள்ளை

இந்த நிலையில்தான் தற்போது திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. திருவெறும்பூரில் இந்த பெல் நிறுவனம் இருக்கிறது. பெல் நிறுவனத்திற்குள் இருக்கும் வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது.

நிறுவனம் இருக்கும்

நிறுவனம் இருக்கும்

பலத்த பாதுகாப்புடன், இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் போதும் அங்கிருக்கும் வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கூடுதல் விவரங்கள்

கூடுதல் விவரங்கள்

இந்த கொள்ளை தொடர்பாக விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லலிதா ஜுவல்லரி கொள்ளையை தொடர்ந்து திருச்சியில் அடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Rs 1.50 crore robbed in Trichy Bhel Co-Operative Bank today: Investigation is on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X