திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சிக்கு செம டிமாண்ட்.. வைகோ, திருநாவுக்கரசர், தயாநிதி மாறன், சபரீசன்.. லிஸ்ட் பெருஸ்ஸா இருக்கே!

திருச்சி தொகுதியில் சபரீசன போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோ, திருநாவுக்கரசர், தயாநிதி மாறன்: திருச்சியில் யார் போட்டியிடுவார்?- வீடியோ

    சென்னை: திருச்சி தொகுதிக்கு எத்தனை பேர்தான் கண் வைத்திருக்கிறார்களோ தெரியாது.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் மவுசு கூடிக் கொண்டே போகிறது... போட்டியிட விரும்பும் எல்லாருமே ஸ்டார் வேட்பாளர்கள்தான்! அதனால்தான் சுவாரசியம் அதிகமாகி வருகிறது.
    சில தினங்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி தொகுதியை கேட்கிறார் என்ற ஒரு பேச்சு எழுந்தது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் நேரு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதற்கு காரணம் நேருவும் வைகோவும் ரொம்பவும் "வேண்டப்பட்டவர்கள்" ஆவர்!

    இதற்காகவே வைகோவும் 2 மாசத்துக்கு திருச்சி பக்கமே நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால் சொந்த கட்சியில் இருக்கும் மூத்த தலைகளை விட்டுவிட்டு, கூட்டணி கட்சி தலைவருக்கு முக்கியமான தொகுதியை ஒதுக்குவதா என்ற புகைச்சல் எழ ஆரம்பித்தது.

    நினைத்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு.. அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு.. கிழித்த முரசொலி! நினைத்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு.. அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு.. கிழித்த முரசொலி!

    வைகோ

    வைகோ

    அதன்பிறகு சீட் ஒதுக்கீடு, சின்னம் விவகாரத்தில் கூட்டணிக்குள் மதிமுக தடுமாறி வருகிறது. நேற்று திருச்சி மகளிர் விழாவில் வைகோ பேசும்போது, "நான் மக்களவைக்கு போட்டியிடுவதா, மாநிலங்களவைக்கு போட்டியிடுவதா என இப்போது கூற முடியாது" என்றார். ஆக மொத்தம் வைகோ திருச்சிக்கு இல்லை என்பது ஓரளவு தெரிந்து விட்டது.

    திருநாவுக்கரசர்

    திருநாவுக்கரசர்

    இதற்கு அடுத்ததாக இந்த தொகுதியை அதிகமாக கேட்டுக் கொண்டிருப்பது முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்தான். தனக்காக திருச்சி தொகுதியை ஒதுக்கக்கோரி ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதுபோக டெல்லி லாபியிலும் கேட்டு முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நேருவிடமும் தன் விருப்பத்தை சொன்னாலும், அதற்கு நேரு ஒப்புக் கொள்ளவில்லைபோல தெரிகிறது. தேவையில்லாம் திருநாவுக்கரசரை இங்கே கொண்டு வந்து நிறுத்தி ஜெயிக்கிற தொகுதியை சிக்கலாக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

     தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன்

    இதனிடையே இந்த தொகுதியை தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டிருந்தாராம். கருணாநிதி இறந்ததிலிருந்தே முக்கிய விவகாரங்களில் ஒதுக்கப்பட்டு வரும் தயாநிதி மாறனுக்கு திருச்சி வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

    சபரீசன்

    சபரீசன்

    இதற்கு அடுத்ததாக இந்த தொகுதியை அதிகமாக கேட்டுக் கொண்டிருப்பது முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்தான். தனக்காக திருச்சி தொகுதியை ஒதுக்கக்கோரி ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதுபோக டெல்லி லாபியிலும் கேட்டு முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நேருவிடமும் தன் விருப்பத்தை சொன்னாலும், அதற்கு நேரு ஒப்புக் கொள்ளவில்லைபோல தெரிகிறது. தேவையில்லாமல் திருநாவுக்கரசரை இங்கே கொண்டு வந்து நிறுத்தி ஜெயிக்கிற தொகுதியை சிக்கலாக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

     பகல் கனவு

    பகல் கனவு

    ராமநாதபுரம்தான் போச்சு திருச்சியாவது வருமா என்று எதிர்பார்த்தார் திருநாவுக்கரசர்... சொந்த தொகுதியில்தான் தோற்றோம், திருச்சியாவது கை கொடுக்குமா என்று ஆவலாக இருந்தார் வைகோ... புறக்கணிப்பு நடந்தே வருவதால் திருச்சி தொகுதியை இந்த முறை திமுக தரும் என்று நம்பினார் தயாநிதி மாறன்.. ஆக மொத்தம் எல்லாமே பகல்கனவாகி போய் குடும்ப அரசியல்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

    English summary
    DMK Sabareesan chance to contest in Trichy Constitution in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X