• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இது எங்க ஊரு சமத்துவ பொங்கல் விழா...!

|

திருச்சி: பொங்கல்தாங்க உண்மையிலேயே தமிழ்நாட்டின் தேசிய திருவிழா.. ஜாதி மதம் பார்க்காமல் கொண்டாடப்படும் ஒரே விழா என்றால் அது தமிழர்களின் பொங்கல் திருநாள்தான்.

Samathuva Pongal celebrated in Trichy

இப்படிப்பட்ட பொங்கல் விழாவை தங்கள் பகுதியில் சமத்துவப் பொங்கலாக கொண்டாடி மகிழ்ந்த கதையை நமது வாசகர் திருச்சி திவ்யா தனது வார்த்தைகளால் விவரித்துள்ளார்.. நீங்களே படிச்சுப் பாருங்க.

Samathuva Pongal celebrated in Trichy

தமிழர்கள் மறக்காமல் இருப்பது அந்த பாரம்பரியம்தான். அதிலும் பொங்கல் விழா என்றால் நமக்கே தெரியாமல் நம்முள் அந்த உத்வேகம் வந்து உட்கார்ந்து கெத்து காட்டும். அப்படிப்பட்ட பொங்கலை எங்கள் ஊரில் ஒன்று கூடி அசத்தி விட்டோம்.

Samathuva Pongal celebrated in Trichy

ரெண்டு நண்பர்கள் ஒன்னு சேர்ந்தா குட்டி செவுறு தான், சொதப்ப போரானுக என கூற கேட்டிருப்போம். ஆனா இங்க 15 நண்பர்கள் சேர்ந்து சும்மா கில்லி மாறி 4 நாட்கள் - இடையில் இடை விடாது மழை- இவர்களோடு போட்டி போட்டாலும் 4 நாட்களும் அதிரடியாக பார்வையாளர்களுக்கு சற்றும் போர் அடிக்காமல் பல புதுமையான போட்டிகள் மட்டும் நம் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தி முடித்து உள்ளனர்...

Samathuva Pongal celebrated in Trichy

யாருப்பா இவங்க...எங்க நடந்துச்சு???...

Trichy Thiruverumbur பக்கத்தில் இருக்கும் Keelakumaresapuram குடிருப்பு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நம் பாரம்பரியம் மறக்க கூடாது என்றும் ஊரில் அந்த 4 நாட்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நடந்த நிகழ்ச்சி தான் இது..

Samathuva Pongal celebrated in Trichy

தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.

Samathuva Pongal celebrated in Trichy

வருடம் முழுவதும் எங்கோ படிக்க, வேலை என்று நாடு விட்டு நாடு , ஊறு விட்டு vooru செல்கிறோம் , எங்கோ வாழ்ந்தாலும் பொங்கல் நம் சொந்த மண்ணில் நம் குடும்பத்தோட நண்பர்களோடு கொண்டாட படை எடுப்போம். முன்பு நம் தாத்தா பாட்டி வீட்டிற்கு அந்த 4 நாட்கள் எப்போ விடுமுறை வரும் என்று எண்ணிய நாட்களும் உண்டு,

Samathuva Pongal celebrated in Trichy

பள்ளி ,கல்லூரியில் பொங்கல் விடுமுறை விட்டவுடன் பல கனவுகளுடன் பேருந்தில் இந்த பொங்கல் விடுமுறை எப்படி இருக்கும் என்ற எண்ணகளுடன் போன பொங்கல் நகள்வுகள் அசைபோட்டு சிரிச்சிட்டே போன தாத்தா வீடு வந்து சேர்ந்துவிடும் ,வந்ததும் கண்ணில் படுவது பொங்கல் விழா நோட்டீஸ் என்ன போட்டியில் பங்கு பெறலாம், எந்த கோலம் போடலாம் என போட்டி சிந்தனைகளுக்கு நடுவே பொங்கல் களைகட்ட துவங்கிவிடும்..

Samathuva Pongal celebrated in Trichy

இரவில் மருதானியிட்டு, அசந்தால் அதிகாலை 6 மணிக்கே "ஒன்பது கோளும் ஒன்றாய் காண" என ஆரம்பிக்கும் விநாயகர் பாடலுடன் loudspeaker alarm நம்மை எழுப்பி விடும். அடிக்கிற குளிரில் கொஞ்சம் துங்கலாம் என படுத்தாலும் பொங்கல் விழா போட்டி பற்றி அறிவிப்புகள் கொடுத்தும், என்னப்பா Agni- organiser மேடைக்கு வரவும், இன்னும் என்ன துங்குறியா?? என்று கேட்க நம்மை அறியாமல் எழுந்துவிடுவோம்...

Samathuva Pongal celebrated in Trichy

4 நாட்கள் முதல் நாள் கும்மியடித்து, பொங்கல் வைத்து யாரு பொங்கல் முதலில் பொங்கியது என்று ஆவலுடன் ,சிறுவர்கள் ,சிறுமியர் போட்டிகள் ஆரம்பித்தன ,ஒட்ட பந்தயம், murruku சாப்பிடுதல், பலூன் உடைத்தல், ஓவியம், பாட்டு, நடனம் முதலிய இந்த காலத்து ஏற்ப வைத்தாலும் எங்கள் தமிழரின் வீர விளையாட்டான வழுக்கு மரம் ஏறுதல்,பானை உடைத்தல், கயிறு இழுத்தல் என ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களுக்கு நடந்த போட்டியில் பங்கு பெற 40 பெண் சிங்கங்கள் (கல்யாணம் ஆனவர்கள்) வந்தார்கள்.

Samathuva Pongal celebrated in Trichy

அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று 30 இளம் பெண்களும் வந்து நடுவர்களை திக்குமுக்காட வைத்தனர். அங்கு ஆண்களுக்கான போட்டியில் 4 கயிறு அறுந்து விட்டது தான் மிச்சம், போட்டி ஒரு அணியில் கல்யாணம் ஆனவர்கள் ஆகாதவர்களுக்கும் நடைபெற்றது , கோலப் போட்டி, ஸ்லோ cycle race, இசைப் பந்து ,இசை வட்டம் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற்றன...

Samathuva Pongal celebrated in Trichy

இந்த விழாவை சிறப்பிக்க Trichy MLA அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் , முன்னாள் MLA , பஞ்சாயத்து தலைவர் மற்றும் இந்த ஊர் பெரியவர்கள் முன்னிலைப்படுத்தி அன்று பரதம், சிலம்பம், பாட்டு என்று எம் இள சிங்கங்கள் பெரியவர்கள் முன்னிலையில் அவர்களை திக்குமுக்காட வைத்து ,போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்..

Corona அச்சுறுத்தல் காரணமாக பல safety measures பின்பற்றியும் மாஸ்க் அணியதவர்களுக்கு மாஸ்க் வழங்கியும், கபசுர குடிநீர் வழங்கியும் நடைபெற்றது... விழாவின் கடைசி நாள் வேலை, கல்லூரிக்கு கிளம்பனுமே , எனவே இந்த 4 நாட்கள் தொடராது அடுத்த பொங்கல் விழா எப்போ வரும் என்ற ஏக்கத்தில் இனிதே முடிவு பெற்றது..

Samathuva Pongal celebrated in Trichy

15 நண்பர்களையும் அவர்களை ஒருங்கினைத்து வழி நடத்திய C.மூர்த்தி AGAM BUILDERS உரிமையாளர் அவர்களையும், மனதார வாழ்த்தியும் ,அவர்கள் இதுபோன்று ஒற்றுமையாக இன்னும் பல பொங்கல் விழா நடத்த ஊக்குவித்து அனைவரும் கிளம்பினர்.

செய்தி, படங்கள்: திவ்யா மூர்த்தி, BHEL, திருச்சி.

 
 
 
English summary
Samathuva Pongal was celebrated in Trichy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X