திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருத்தர ஏமாத்தணும்னா ஆசையை தூண்டணும்.. சதுரங்கவேட்டை பாணியில் நடந்த பல கோடி மோசடி.. எப்படி நடந்தது?

Google Oneindia Tamil News

திருச்சி: ஆசை யாரை விட்டது. ஆசையை தூண்டிவிட்டு சதுரங்கவேட்டை பட பாணியில் பணத்தை முதலீடு செய்ய வைத்து மக்களிடம் ஒரு கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

Recommended Video

    சதுரங்கவேட்டை ஸ்டைலில் பல கோடி மோசடி.. அதிர்ச்சியில் முதலீடு செய்தவர்கள் - வீடியோ

    தினசரி வட்டி தருவதாக துணிகர மோடிசயில் ஈடுபட்ட செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

    திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின்கார்ப் என்கிற நிதி நிறுவனம் இயங்கியது.அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினமும் குறிப்பிட்ட தொகையும் ஒரு வருடத்திற்கு பிறகு முழுத்தொகையும் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர்... இவர்தான்... முன்னாள் பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர்!!ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர்... இவர்தான்... முன்னாள் பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர்!!

    300 முதல் 900 ரூபாய்

    300 முதல் 900 ரூபாய்

    அந்த நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அப்படி முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப 300 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை தினமும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

    பதில் அளிக்கவில்லை

    பதில் அளிக்கவில்லை

    பணம் செலுத்தியது முதல் 30 நாட்களுக்கு சரியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் 30 நாட்களுக்கு பின்பு வராமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் அது குறித்து நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை.

    பொருளாதார குற்றப்பிரிவு

    பொருளாதார குற்றப்பிரிவு

    சிறிது காலத்தில் அந்த நிறுவனத்தை கவனித்து வந்த முத்துராமலிங்கம், செந்தில் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் குறித்து பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய
    50க்கும் மேற்பட்டோர் திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திருச்சி ஆட்சியரிடம் புகார்

    திருச்சி ஆட்சியரிடம் புகார்

    அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். செந்தூர் நிதி நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நாங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்று தர வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Multi-crore scam sathuranga vettai movie style: The victims have lodged a complaint with the Trichy District Collector urging action against those who swindled crores of rupees
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X