திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அரை மணி நேரத்தில் ரஜினியே தன்னுடைய கருத்தை மாற்றிவிட்டார் - சீமான்

    திருச்சி: தனக்கு காவி சாயம் பூச முடியாது என கூறிய அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு மதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் திருச்சி விமான நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் ஆஜராக இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?

    பாஜக சதி

    பாஜக சதி

    அவர் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். எனவே இந்த விவகாரத்தில் பாஜக திட்டமிட்டு சதி செய்துள்ளது.

    பூசி மெழுகிய ரஜினி

    பூசி மெழுகிய ரஜினி

    ரஜினியால் ஒரு அரை மணி நேரம் கூட ஒரு நிலைப்பாட்டில் இருக்க முடியவில்லை. காவி சாயம் பூசக் கூடாது என்று கூறிவிட்டு அரைமணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டி

    உள்ளாட்சி தேர்தலில் போட்டி

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். வரலாறு உள்ளவன் தேடுவான். இல்லாதவன் திருடுவான். பாஜக அனைத்தையும் தனத்தாக்கி கொள்ள நினைக்கிறது.

    சிவாஜியை சிறுமைப்படுத்தும் செயல்

    சிவாஜியை சிறுமைப்படுத்தும் செயல்

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து சிவாஜியை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது. எம்ஜிஆருக்கு தெரிந்த அரசியல் நுட்பம் சிவாஜிக்கு தெரியவில்லை என்றார்.

    English summary
    Naam Tamilar movment organiser Seeman in Trichy says that Rajini could not stand in one stand even for half an hour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X