திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாயை கல்லெடுத்து எறிஞ்சா 4 தெரு தள்ளி குலைக்குமே.. அதுமாதிரி தூரமா போய் திட்டுறது.. சீமான் நக்கல்

திருச்சியில் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Google Oneindia Tamil News

திருச்சி: "மாட்டுக்கறி தின்னா கல்லால் அடிச்சு கொல்வியா? ஊரானுக்கு ஏற்றி விடுவே.. உள்ளூர்க்காரன் தின்னா கொல்வியா?.. என்று சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: "தேர்தல் என்பது நமது வாக்கை விக்கிற ஒரு சந்தை அல்ல. நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிற சிந்தை என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.

இவர்கள் என்னத்த சாதித்தார்கள்? பெரியார் சமாதி, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா, கருணாநிதி சமாதி.. இதைத்தானே இவர்கள் மண்டியிட்டு கும்பிட வைத்தார்கள். இதைத்தானே இவர்கள் சாதிக்க முடிந்தது. இதுதானா இவர்கள் கற்பித்த பகுத்தறிவு, நாத்திகம் எல்லாம். எங்கே கொண்டு நிறுத்தியுள்ளார்கள் மக்களை!

ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்

தாய்மொழி

தாய்மொழி

நாங்கள் வந்தால் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்று சொல்கிறாரே ஸ்டாலின், அப்போ வந்தீங்களே, ஏன் இதை செய்யல? என் தாய் மொழியில் வழக்காடி நீதி பெற முடிகிறதா? வழிபாட்டில் தாய்மொழி இருக்கிறதா? எவ்வளவு தூரம் வஞ்சிக்கப்பட்டுள்ளோம்.

வருமானம் குறையுது

வருமானம் குறையுது

ஒரு கோயில்ல ஆசிபான்னு ஒரு பச்சை பிள்ளையை வெச்சு கற்பழிச்சி கொன்னுட்டான். அதுக்கு இந்த நாட்டின் பிரதமரின் பதில் என்ன? ராகுல் காந்தியின் கருத்து என்ன? இவர்களின் மனநிலை என்ன? இதுக்கு அமைச்சர்களின் பதில் என்ன தெரியுமா? "எதுக்கு தேவையில்லாம இதை பத்தி பேசிட்டு இருக்கீங்க.. வெளிநாட்டில இருந்து வர்ற பயணிகளின் எண்ணிக்கை குறைஞ்சு போகுது. வருமானம் குறையுது" என்றார்கள்.

மாட்டுக்கறி

மாட்டுக்கறி

அந்த குற்றவாளிகளை கைது செய்து கூட்டிட்டு போகும்போது, பாரத மாதா கீ ஜே என்று கத்துகிறார்கள். இப்படி ஒரு கொடுமை எங்க நடக்கும்? மாட்டுக்கறி தின்னாதேன்னு கல்லால் அடிச்சு 48 பேரை கொல்றாங்க. ராணுவ அதிகாரிகள் 42 பேர் இறந்தது நாட்டுப்பற்றுதான்.

என்ன தர்மம்?

என்ன தர்மம்?

ஆனா 48 பேரை கல்லால் அடிச்சு கொன்னீங்களே அது என்ன பற்று? மாட்டுக்கறியை ஏற்றுமதி செஞ்சு பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணி ஈட்டுது. அப்படின்னா.. ஊரானுக்கு ஏற்றி விடுவே.. உள்ளுர்க்காரன் தின்னா கொன்னுபுடுவியா? இது என்ன தர்ம நியாயம்?

வா.. தர்க்கம் பண்ணலாம்

வா.. தர்க்கம் பண்ணலாம்

இவ்வளவு கேள்வி எழுப்புறோமே.. ஒன்னுத்துக்காவது பதில் இருக்கா? நாயை கல்லெடுத்து எறிஞ்சா நாலு தெரு தள்ளி குலைக்குமே.. அதுமாதிரி தூரமா போய் நின்னு என்னை திட்டுறது. நேருக்கு நேர் வாதிடு. இந்த பக்கம் ராகுல், மோடி, அந்த பக்கம் ஸ்டாலின், அப்பறம் ஓபிஎஸ், ஈபிஎஸ்.. வாங்க எல்லாரும்.. தர்க்கம் செய்யலாம் இந்த நாட்டின் வளர்ச்சி. பொருளாதார கொள்கை, கல்வி திட்டங்களை பற்றி. இவங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதுதான் விஷயம்" என்றார்.

English summary
In Trichy Campaign, Seeman criticized PM Modi and Rahul Gandhi for their Economic, Educational Policies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X