திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலனுடன் 2 நாள் ஊர் சுற்றிய ஹாஸ்டல் மாணவி.. வார்டன் என்ன செய்கிறார்.. திருச்சி போலீஸ் நறுக் கேள்வி

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போலீசார் சரமாரி கேள்விகளை கல்லூரி நிர்வாகத்திடம் எழுப்பி உள்ளனர்.

திருச்சி துவாக்குடியில் செயல்பட்டு வரும் என்ஐடி பொறியியல் காலேஜ்-ல் ஹாஸ்டலில் தங்கி 3-ம் வருடம் படிக்கிறார் அந்த மாணவி. இவர், கடந்த 1ம் தேதி ஹாஸ்டலில் அனுமதி இல்லாமல் கிளம்பி சென்று காதலனுடன் ஊர் சுற்றி உள்ளார். 2 நாட்களாக காலேஜும் போகவில்லை, ஹாஸ்டலுக்கும் போகவில்லை.

Sexual harassment of College Student issue in Trichy

பிறகு நடுராத்திரி, காலேஜ் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் உட்கார்ந்திருக்கும்போது, அந்த வழியாக வந்த ஒரு நபர் தன்னை போலீஸ் என்று சொல்லி, காதலனை விரட்டி அடித்துள்ளார்.

போதையில் இருந்த மாணவியை ஹாஸ்டலில் விடுவதாக சொல்லி, காலேஜ் காம்பவுண்டுக்குள் உள்ள காட்டுப்பகுதிக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் போதை தெளிந்த மாணவி, போலீசில் புகார் சொல்லவும், அந்த "போலி போலீஸ்" மணிகண்டனை போலீசார் கைது செய்துவிட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பில் நிறைய கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

என் புருஷனுக்கும் என் அம்மாவுக்கும் கள்ள உறவு.. அதனால எனக்கு இளைஞனோட உறவு.. அதிர வைத்த டீச்சர்!

"பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 1-ந் தேதி ஹாஸ்டலில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அப்படியானால் அதற்கு வார்டனிடம் முறையாக அனுமதி பெற்று சென்றாரா? அல்லது அவராகவே வெளியில் சென்றுவிட்டாரா? 2 நாளாக ஒரு மாணவி ஹாஸ்டலில் இல்லை என்றால், அதை வார்டன் உட்பட யாருமே கவனிக்கவில்லையா? மாணவியின் பெற்றோரிடம் புகார் தரப்பட்டதா? அல்லது போலீசிலாவது புகார் தந்தார்களா?" என்று கல்லூரி நிர்வாகத்திடம் திருச்சி எஸ்பியே.. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அது மட்டுமில்லை.. கைதான மணிகண்டன், இந்த காலேஜ் பின்புறம்தான் தனியாக வசித்து வருகிறாராம். அதனால் தினமும் நைட் நேரத்தில் மாணவிகளை அழைத்து வருவதை இவர் வழக்கமாகவும் வைத்திருக்கிறாராம். இதெல்லாம் வார்டன்கள், செக்யூரிட்டிகளை தாண்டி எப்படி நடந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதனால் இவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக ஒரு புகார் பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது. அதனால் திருச்சி போலீசார், விரைவில் ஒரு நல்ல அதிரடியை இந்த விவகாரத்தில் கண்டிப்பாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

English summary
Trichy Policeare conducting serious investigations on Engineering College Students sexual harassment case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X