திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக தரையில் உரசிய விமானம்.. நொடிப்பொழுதில் தப்பியது.. திருச்சி ஏர்போர்ட்டில் மீண்டும் பரபரப்பு!

திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேகமாக தரையில் உரசிய விமானம்., திருச்சி ஏர்போர்ட்டில் மீண்டும் பரபரப்பு!

    திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது.

    திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு சம்பவங்களோ அதிகம் நடக்க தொடங்கிவிட்டது. கடந்த மாதம் இரண்டு முறை ஏர்இந்தியா விமானம் பிரச்சனைக்கு உள்ளானது.

    அப்படித்தான் நேற்றும் இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

    இலங்கை விமானம்

    இலங்கை விமானம்

    இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.125 க்கு மேற்பட்டோர்கள் அந்த விமானத்தில் இருந்தார்கள். திருச்சியில் காலை 9.25 மணிக்கு விமானம் தரையிறங்க வேண்டியது.

    மோசமான வானிலை

    மோசமான வானிலை

    அதன்படி இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் தரையிரங்க வந்துள்ளது. ஆனால் திருச்சியில் இரவில் இருந்தே மோசமான வானிலை நிலவியது. மழை பெய்து வந்தது. இதனால் பைலட்டிற்கு விமான ஓடுபாதை சரியாக தெரியவில்லை.

    எப்படி

    எப்படி

    தரையிறங்கும் போது வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாமல் தரையில் உரசியபடி தாழ்வாக சென்றது. இதனால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளானார்கள். அதன்பின் மீண்டும் கொழும்பு விமான நிலையம் நோக்கி அந்த விமானம் திரும்பி சென்றது. விமானி சாமர்த்தியத்தால் அனைவரும் எந்தவித விபத்தும் இல்லாமல் தப்பித்தார்கள்.

    மீண்டும் வந்தனர்

    மீண்டும் வந்தனர்

    திரும்பவும் அந்த விமானம் கொழும்புக்கு சென்று மீண்டும் காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து அவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    English summary
    Sri Lanka plane supposed to land in Trichy returned due to bad weather.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X