திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் கோவில் முறைகேடுகள்...அறநிலையத்துறை அதிகாரியை தெறிக்க விட்ட அர்ச்சகர்

ஸ்ரீரங்கம் கோவில் புரேகிதர் கேட்ட கேள்வியை எதிர்கொள்ள முடியாதல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தலைதெறிக்க ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் குறைதீர்ப்பு அர்ச்சகர் ஒருவர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை கேள்விகளால் கேட்டு தெறிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்கு பெயர்போன ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். சிலை கடத்தல் பிரிவில் தொடர்புடைய பெண் அதிகாரி கூட்டத்தில் பங்கேற்றது ஏன் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பங்கேற்றால் எப்படி எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கேட்டார். இதைக்கேட்ட அதிகாரி அந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தலை தெறிக்க ஓடினார்.

SriRangam temple scandals The priest who fired the HRCED Department

திருச்சி பட்டர் தோப்பை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன், கடந்த 26.10.2019ஆம் தேதி தனது முகநூலில், ஏற்கெனவே பெரிய பெருமாளின் திருமேனியில் இருந்து சாளக்கிராமங்களைத் திருடியவர்கள், நம்பெருமாளை மாற்றித் திருடியவர்கள், கோயிலை சட்டவிரோத அகழ்வாராய்ச்சி செய்து வைர, வைடூரியங்களைத் திருடியவர்கள் இப்போது பல ஆயிரம் வருடங்களாக மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் நித்யசூரியான புராதன விளக்கை திருட முற்படுகின்றனர் என பதிவிட்டிருந்தார்.

ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானத்தில் ஆயிரத்து 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த குத்துவிளக்கை மாற்றி வெள்ளி விளக்கு வைக்க முயற்சி நடப்பதாக ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்த புகாரிலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உண்மை இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்

இதே போல ரங்கராஜன் நரசிம்மன் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் தொழில் அதிபர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொசுவின் தத்துவம்.. அழகாக பின்னப்பட்ட ஒரு கதை.. சிம்ப்ளி சூப்பர்ப் படம்! கொசுவின் தத்துவம்.. அழகாக பின்னப்பட்ட ஒரு கதை.. சிம்ப்ளி சூப்பர்ப் படம்!

கோவில் குறித்தும் நிர்வாகிகள் குறித்தும் வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரியை கேள்வி கேட்டு திணறடித்து தெறிக்க விட்டார். இதைக்கேட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

English summary
The incident where a Srirangam temple devotees' grievance priest was questioned by a Hindu temple official at the district collector's office has caused a stir. The controversial Rangarajan Narasimhan was the one who caused a stir by asking questions over and over again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X