திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கயிறு, பலூன், ரோபோட், சிலிண்டர் கேமரா.. எல்லாமே தோல்வி.. எங்கு தவறு நடந்தது.. ஏன் இப்படி ஆச்சு?

சுஜித்தை கருவிகள் இருந்தும் மீட்க முடியாமல் போனது வியப்பாகவே உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith Rescue Operation | தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?-வீடியோ

    மணப்பாறை: சுஜித்தை மீட்க, கிரிப்பர், பலூன், ரோபோட், கயிறு என எத்தனை எத்தனை முறைகளை பயன்படுத்தினாலும் எல்லாமே தோல்வி அடைந்துவிட்டதற்கு என்ன காரணம்? இயந்திரங்கள் கோளாறா? அல்லது சூழலா?

    குழந்தை விழுந்துவிட்டான் என்றதுமே முதலில் மீட்பு பணிக்கு அழைத்தது மணிகண்டனைதான்.. இவர் ஒரு பிளம்பர். ஆழ்துளை கிணறுகளில் சிக்கி தவிக்கும் குழந்தைகளை மீட்க ரோபாட்டை கடந்த 2014-இல் கண்டுபிடித்தார்.

    இதை கொண்டு ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டதால்தான் மணிகண்டனை உடனடியாக வரவழைத்தார்கள். இவரது ரோபோட்டில் கை போன்ற ஒரு இயந்திரம் இருப்பதால் துளையினுள் சென்று குழந்தையை அலேக்காக தூக்க முடியும் என்று நம்பப்பட்டது.

    எதுக்காக இறந்தோம்னு தெரியாமலேயே குழந்தை சுஜித் உசுரை விட்டுருச்சே.. கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.எதுக்காக இறந்தோம்னு தெரியாமலேயே குழந்தை சுஜித் உசுரை விட்டுருச்சே.. கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.

    ரோபோட்

    ரோபோட்

    ஆனால், துரதிருஷ்டவசமாக குழந்தையின் கைகளை ரோபாட் இயந்திரத்தால் இறுக்கி பிடிக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கேற்ப குழந்தை விழவில்லை. மிகவும் குறுகலான துளையில்தான் சுஜித் விழுந்தான்.. அதனால் ரோபாட்டிக்கால் நுழைய முடியவில்லை. இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

    வழுவழுப்பு தன்மை

    வழுவழுப்பு தன்மை

    இதற்கு அடுத்தபடியாக கயிறு கட்டி இழுக்கலாம் என்றாலும் அதற்கும் வாட்டப்படவில்லை. கயிற்றை குழந்தையின் கைகளைச் சுற்றிக் கட்டி தூக்குவது என்ற யோசனை வந்தது. அல்லது குழந்தையே கயிற்றை கெட்டியாக பிடித்து கொண்டு வந்துவிடுவான் என்றும் யோசிக்கப்பட்டது. ஆனால் குழிக்குள் காற்று வசதிகள் இல்லை.. ஒரே புழுக்கம்.. இதனால் வெப்பம் அதிமாகவே இருந்தது. இதில்தான் சுஜித்துக்கு நன்றாக வியர்த்திருக்கிறது. இந்த வழுவழுப்பு தன்மையினால் சுஜித் கயிறை பிடித்து மேலே வர முடியாத நிலைமை வந்தது.

    ஆக்ஸிஜன் சிலிண்டர்

    ஆக்ஸிஜன் சிலிண்டர்

    குழந்தை ஏடாகூடமாக சிக்கி கொண்டதால், இந்த முயற்சியும் தோல்வி ஆனது. இதற்கு பிறகுதான் ராஜேஷ் குழுவோட ஆக்சிஜன் சிலிண்டர் மாடலை உள்ளே அனுப்பினார்கள். ஆனால், அதற்குள் குழந்தை கீழேபோய்விட்டான். ஒருவேளை இந்த முயற்சியை முதலிலேயே செய்திருக்கலாம் என்றே சொல்கிறார்கள்.

    வேக்யூம் பம்ப்

    வேக்யூம் பம்ப்

    இதன்பிறகு கிரிப்பர் மூலம் குழந்தையை பிடித்து கொண்டு மேலே கொண்டு வருவது என முடிவானது. ஆனால் அந்த மணல் ஈரப்பதமாக இருந்தது.. குழிக்குள் விடும் அளவுக்கு இயந்திரமும் சிறியதாக இல்லை. இதன்பிறகு வேக்யூம் பம்ப் கொண்டு, குழந்தையை மேலே இழுக்கும் முயற்சி கையாளப்பட்டது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது.

    ரிஸ்க்

    ரிஸ்க்

    பலூன் ஒன்றை உள்ளே அனுப்பி, பிறகு அதை பெரிதாக்கி குழந்தையைத் தூக்கி பிடித்து மேலே கொண்டு வரலாமே என்று பலரும் யோசனை சொன்னார்கள். ஆனால் இதை பயன்படுத்தி இருந்தால் பெரிய ரிஸ்க் ஆகி இருக்கும் என்கிறார்கள். பலூனுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், கண்டிப்பாக சுஜித்துக்கும் வந்துவிடும் என்பதால்தான பலூன் முறை கைவிடப்பட்டது.

    கடைசி நம்பிக்கை

    கடைசி நம்பிக்கை

    கடைசியாகத்தான் பக்கவாட்டில் குழி தோண்டிய குழந்தையை எடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். இது வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட முறை என்கிறார்கள். அதனால் எப்படியும் குழந்தையை எடுத்து விடலாம் என்றே நம்பப்பட்டது. இதற்காக அதிநவீன ரிக் மெஷினை கொண்ட வந்தார்கள். ஆனால் பாறை வந்து குறுக்கே நிற்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எவ்வளவோ டெக்னாலஜியை பயன்படுத்தினாலும், ஆழ்துளை கிணறுகளில் விழுந்து அநியாயமாக பறிபோகும் உயிர்களை காப்பாற்ற தொழில்நுட்பம் இன்னும் தேவைப்படுகிறது.

    English summary
    sujith rescue operation failure: methods of recovery have all failed by the teams
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X