திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழியில் இருந்து வந்த துர்நாற்றம்.. சுரங்கத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith Rescue Operation | தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?-வீடியோ

    திருச்சி: சுஜித்தை மீட்கும் பணியில் நேற்று கடைசி கட்டத்தில் திடீர் மாற்றங்கள் பல நடந்தது. தீயணைப்பு வீரர் அஜித்குமார் என்பவர் நேற்று சுரங்கத்திற்குள் சென்று சோதனை செய்தது இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சுரங்கத்தின் தன்மை எப்படி இருந்தது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    கிட்டத்தட்ட 80 மணி நேர போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்துவிட்டது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது.

    சுஜித் மரணம் மனதை உலுக்குகிறது... டிடிவி தினகரன் இரங்கல்சுஜித் மரணம் மனதை உலுக்குகிறது... டிடிவி தினகரன் இரங்கல்

    என்ன முடிவு

    என்ன முடிவு

    சுஜித்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. ரிக் மிஷின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டப்பட்டது. ரிக் மிஷின் மூலம் 65 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் குழி எப்படி இருக்கிறது என்று பார்க்க தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்தனர். உள்ளே சென்று சிறுவனை மீட்க முடியுமா? உள்ளே பாறைகள் எப்படி இருக்கிறது, உடலில் குத்துமா என்று பார்க்க தீயணைப்பு படை முடிவு செய்தது.

    தீயணைப்பு வீரர்கள்

    தீயணைப்பு வீரர்கள்

    இதையடுத்து சரியாக நேற்று இரவு 9.55க்கு தீயணைப்பு வீரர் அஜித்குமார் குழிக்குள் இறங்கினார், உடலில் கயிறு கட்டி படிகள் மூலம் குழிக்குள் இறங்கினார். குழிக்குள் இறங்கிய அஜித்குமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சேர்ந்தார். உள்ளே இருந்து பாறை மாதிரியை அவர் வெளியே கொண்டு வந்தார்.

    பணிகள் நிறுத்தம்

    பணிகள் நிறுத்தம்

    இதையடுத்துதான் மேலும் குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. உள்ளே பாறைகள் கடுமையாக இருக்கிறது என்று பாறை மாதிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கிடைமட்டமாக சுரங்கம் அமைப்பது கடினம். அப்படி அமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 மணி நேரம் கூட ஆகும் என்று அஜித்குமார் கூறி இருக்கிறார். அதேபோல் உட்பகுதியில் இறங்கி மீட்பது கொஞ்சம் கடினம் என்றும் அஜித் குமார் கூறினார்.

    உடல் எப்படி

    உடல் எப்படி

    இதன்பின் சுஜித்தின் உடல் எப்படி இருக்கிறது என்று குழாய் வழியே பார்க்கப்பட்டது. ஏர் லாக்கில் 88 அடியில் சுஜித் உடல் இருந்தது. அந்த உடல் சிதிலம் அடைந்து, ரத்த காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்களும் அவரின் ஜூம் செய்யப்பட்ட புகைப்படத்தை பார்த்து உறுதி செய்தனர்.

    மோசமான நாற்றம்

    மோசமான நாற்றம்

    மேலும் சுஜித் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொன்னது மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை இரண்டையும் வைத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, சுஜித் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் சுஜித் உடல் ஆழ்துளை கிணற்றின் வழியாகவே மீட்கப்பட்டது.

    English summary
    Sujith: What Fireman Ajithkumar told the rescue crew after checking the tunnel yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X