திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்.. திருட்டு நகையை வச்சு 2 படம்.. சுரேஷ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery theif Murugan affair with Tamil actress

    திருச்சி: திருடிய நகைகளை வச்சுதான் 2 தெலுங்க படம் எடுத்தோம்.. அந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்" என்று கொள்ளையன் சுரேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

    லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் & கோ கொள்ளையடித்தது.

    suresh confessed to trichy police

    இதில், மணிகண்டன் போலீசில் சிக்கினான். சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், பெங்களூரு கோர்ட்டில் முருகனும், சரண் அடைந்தனர் இதைதவிர, சுரேஷின் தாயார் கனகவள்ளி, முருகனின் நண்பன் கணேசன், ராதாகிருஷ்ணன் மொத்தம் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் முருகனையும், சுரேஷையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேஷிடம் விசாரித்தனர். நேற்று 3-ம் நாள் விசாரணையில் பல விஷயங்களை போலீசாரிடம் சுரேஷ் சொன்னதாக தெரிகிறது.

    "என் மாமா முருகன் என்னை ஹீரோவா வெச்சு படம் எடுக்க ஆசைப்பட்டார். 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க ஆரம்பிச்சோம். 45 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா பைனான்ஸ் பிரச்சனையால பாதியிலேயே படம் நின்னு போயிடுச்சு. இதுக்கு அப்பறம், திரும்பவும் தெலுங்கில் மான்சா என்ற படத்தை முழுசா எடுத்தோம்.

    அதில் நடிச்ச ஒரு பெரிய ஹீரோயினுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதுக்காக அட்வான்ஸ் ரூ.6 லட்சம் தந்தோம். மீதி தர முடியாம போயிட்டதாலே,அந்த நடிகை எங்க மேல ஐதராபாத் கோர்ட்டில் கேஸ் போட்டார். அதனால படம் முழுசா எடுத்தும் அதை ரிலீஸ் பண்ண முடியல. இப்படி 2 பட எடுத்து அதனால பண நெருக்கடி அதிகமாயிட்டதாலேதான், திரும்பவும் கொள்ளை அடிக்க பிளான் பண்ணினோம்.

    அப்படித்தான், திருச்சி பஞ்சாப் நேஷனல் பேங்க்கில ஓட்டை போட்டு நகை பணம் எடுத்தோம். மாமாதான் சுவற்றில் ஓட்டை போட்டார். அதேபோல லலிதா ஜூவல்லரியிலும் கொள்ளை நடத்தினோம்" என்றான்.

    English summary
    Lalitha Jewellery theft case: suresh confessed to trichy police and says about gang leader murugans robberies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X