திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாறைக்கு அடியில்.. அடகு கடையில்.. கிலோ கணக்கில் தங்கம்.. சுரேஷிடம் 7 நாட்கள் விசாரணை

சுரேஷை மீண்டும்7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery theif Murugan affair with Tamil actress

    திருச்சி: பாறைக்கு அடியிலே ஒன்றரை கிலோ தங்கம்.. இது போக அடகு கடையில ஆட்டைய போட்டது.. இப்படி நீள்கிறது சுரேஷின் கொள்ளை சமாச்சாரம்.. பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளை அடித்ததில், இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்கம் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை.. இதை விசாரிக்க மேலும் ஒரு வார காலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    லலிதா ஜுவல்லரி கொள்ளையன் திருவாரூர் சுரேஷிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோக திருச்சி பஞ்சாப் நேஷனல் பேங்க் கொள்ளை குறித்தும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    suresh in another 7 days police custody

    இன்னொரு குற்றவாளியான கணேசனை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவர் லலிதா ஜூவல்லரி நகை ஒன்றரை கிலோ, வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இதில் சுரேஷூம் நிறைய பங்கு இருப்பதால்தான் விசாரணை அதிகமாக நடத்த வேண்டி இருந்தது. ஏற்கனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.அப்போதுதான் பேங்கில் கொள்ளையடிக்கப்பட்ட உருக்கி வைத்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    ஜாதி கலவரம், வீரப்பன்.. பல்வேறு அதிரடிகளை செய்த விஜயகுமாரின் ஆலோசகர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது!ஜாதி கலவரம், வீரப்பன்.. பல்வேறு அதிரடிகளை செய்த விஜயகுமாரின் ஆலோசகர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது!

    கணேசன், சுரேஷ் தந்த தகவலின்பேரில் 2கிலோ நகைககள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சோழவந்தான் அருகே ஒரு பாறையின்கீழ் புதைத்து வைத்துள்ளதாக சுரேஷ் சொல்லவும், அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்க நகைகளை பாக்கி உள்ளன.. அதை சுரேஷ் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.

    அதனால், திரும்பவும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஸ்ரீரங்கம் கோர்ட்டில் அனுமதி கேட்டு, அதன்படி 7 நாள் விசாரணைக்கு அனுமதியும் தரப்பட்டுவிட்டது. கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் சுரேசை ரகசிய இடத்தில் வைத்து மீதமுள்ள நகைகள் எங்கே, அவைகளை யாரிடம் விற்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைதவிர, மதுரை, பெங்களூர் ஆகிய இடங்களில் அடகுக்கடைகளிலும் சுரேஷ் கைவைத்திருக்கிறானாம். இந்த விவரங்களை எல்லாம் பெற எப்படியும் ஒரு வார காலம் ஆகும் என்கிறார்கள்!

    English summary
    lalitha jewellery theft case issue: culprit suresh in another 7 days police custody
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X