திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில் இல்லாத போதே கட்டப்பஞ்சாயத்து செய்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . திமுக ஆட்சியில் இல்லாத போதே அராஜகத்துடன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் என்ன செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

Recommended Video

    திருச்சி: ஆட்சியில் இல்லாத போதே திமுக அராஜகம்.. அதிகாரத்தில் அமர்ந்தால் கஷ்டம்தான்.. முதல்வர் பழனிச்சாமி ஆவேசம்..!

    திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தமிழகம் வரை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டபோது விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது பின்னர் கண்ணனூர் அடுத்த கொத்தம்பட்டிகாலனியில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி இறங்கி களிடையே அரசின் வளர்ச்சித் திட்டங்களை கூறி துண்டுப்பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினார்.

    சொந்த ஊரில் அதிக நலத்திட்ட உதவிகள்.. ஒரே நாளில் 10,954 பயனாளிகளுக்கு உதவி... ஒபிஎஸ் அதிரடிசொந்த ஊரில் அதிக நலத்திட்ட உதவிகள்.. ஒரே நாளில் 10,954 பயனாளிகளுக்கு உதவி... ஒபிஎஸ் அதிரடி

    Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy attacks dmk party

    துறையூர் பாலக்கரையில் முதல்வர் பேசுகையில், குடிமராமத்து பணி மேற்கொண்டு ஆறு ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால் இன்று 313 ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க அதிமுக அரசே காரணம். அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டதின் காரணமாக இன்று உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இது அதிமுக அரசின் சாதனை ஆகும்.

    Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy attacks dmk party

    வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 2500 அனைத்து குடும்ப அட்டைகளும் வழங்க என் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. . திமுக ஆட்சியில் இல்லாத போதே அராஜகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் என்ன செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

    English summary
    Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy campaigned in Thuraiyur area of Trichy district. he attacks dmk at campaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X