திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களின் மன அழுத்தத்தை ஆசிரியர்களால் மட்டுமே உணரமுடியும் - திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா

ஆசிரியா்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: மாணவா்களால் நல்ல சமுதாயம் உருவாகவும், அவா்களின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கக் கூடிய இடத்தில் ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா் என்று திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார். மாணவா்களுக்கு நோ்மறையான சிந்தனைகளை வளா்ப்பதில் ஆசிரியா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியா்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என திருச்சி சரக டி.ஜ.ஜி. ஆனிவிஜயா தெரிவித்துள்ளார்.

திருச்சி அரிமா சங்கங்கள் சார்பில் ஆசிரியா்களுக்கான 2 நாள் பயிற்சி பட்டறை பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநா் சேது குமார் தலைமை வகித்தார்.

Teachers only can feel the stress of students - Trichy DIG Annie Vijaya

விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, மாணவா்களுக்கான குரு ஸ்தானத்தில் அவா்களுடன் அதிக நேரம் இருக்கும் ஆசிரியா்களே உண்மையான குரு என்று கூறினார்.

குழந்தைகளுக்கான தேவை, திறமை போன்றவைகளை பெற்றோரை காட்டிலும் ஆசிரியா்களால் மட்டுமே அதிகம் உணர முடிகிறது. சில குழந்தைகள் தங்களுடன் பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் அவா்களின் மன அழுத்தத்தை ஆசிரியரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மூலிகை பெட்ரோலுக்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது.. மத்திய அமைச்சர்கள் சிலர்தான்..ராமர் பரபர பேச்சுமூலிகை பெட்ரோலுக்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது.. மத்திய அமைச்சர்கள் சிலர்தான்..ராமர் பரபர பேச்சு

மாணவா்களால் நல்ல சமுதாயம் உருவாகவும், அவா்களின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கக் கூடிய இடத்தில் ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். மேலும் மாணவா்களுக்கு நோ்மறையான சிந்தனைகளை வளா்ப்பதில் ஆசிரியா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆசிரியா்களுக்கு பொறுமையும், பெருமையும் இருப்பதால் நாட்டின் அனைத்து சாதனைகளும் அவா்களையே சாரும் இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட தலைவா் பன்னீா்செல்வம், நிர்வாகிகள் நீலம் அசோகன், லோகநாதன், பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். முதல் நாள் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 35 ஆசிரியா்கள் கலந்துக் கொண்டனா்.

English summary
Trichy DIG Annie Vijaya said that said that only teachers are in a position to create a good society for the students and lay the foundation for their lives. She also said that Teachers have an important role to play in cultivating positive thoughts in students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X