திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேஜஸ் என்றால் வேகம்.. மதுரை-சென்னை ரயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பில்லை.. கைவிரித்த அதிகாரிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tejas express private train | தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு

    திருச்சி: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ஏசி ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பு இல்லை என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மதுரை-சென்னை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் 'எக்சிகியூடிவ்', 'சேர்கார்' கட்டணம் முறை அமலில் உள்ளது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெயர்கள் பல தமிழகத்தின் பெருமையை சாற்றும் வகையில் உள்ளது.

    tejas express rail name may not be changed: says officials

    அதாவது திருச்சி-சென்னை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் என்பன உள்ளிட்ட பெயர்களை கொண்டதாக உள்ளது.

    இந்த நிலையில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் இந்தியில் இருப்பதால் அதனை தமிழிலில் 'தமிழ்ச்சங்கம்' என மாற்ற வேண்டும் என்பதை திருச்சியில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் திருச்சி, மதுரை கோட்ட பகுதிக்குட்பட்ட எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும் கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

    இந்த நிலையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என திருச்சியில் ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "தேஜஸ் என்பது இந்தி வார்த்தையில் வேகம் என்ற பொருளாகும். தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் ஒருசில இடங்களில் இதுபோன்ற ரயில் இயக்கப்படுகிறது.

    இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா! இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா!

    தேஜஸ் என்பது ஒரே பெயராக இருப்பதால் அதனை மாற்ற வாய்ப்பு இல்லை. இருப்பினும் எம்.பி.க்களின் கோரிக்கையை ரயில்வே வாரியத்திடம் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். ரயில்வே வாரியம் தான் ரயிலின் பெயரை மாற்ற முடிவு செய்யும்" என்றார்.

    English summary
    chennai - madurai tejas express rail name may not be changed: says officials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X