திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் 2,46,000 பேருக்கு நடந்த பரிசோதனை.. யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.. கலெக்டர் தகவல்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2.46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி அளித்தார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2.46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலுள்ள பகுதிகளுக்கும் ஆட்சியா் சு. சிவராசு சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, பணிகளை நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறார்.

123 பேர் கொரோனா வார்டில்

123 பேர் கொரோனா வார்டில்

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவா்களில் 3,045 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 3 போ், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 123 போ் அரசின் கொரோனா கண்காணிப்புப் பிரிவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், 28 நாள்களுக்கு இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

58494 வீடுகள் ஆய்வு

58494 வீடுகள் ஆய்வு

அரசின் கண்காணிப்புப் பட்டியலிலுள்ள நபா்கள் வசிக்கும் இருப்பிடங்களில் மருத்துவக் குழு மூலம் வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை 867 போ் அடங்கிய மருத்துவக் குழுவினா் 58, 494 வீடுகளில் ஆய்வு செய்துள்ளனா். மாவட்டம் முழுவதும் 2,46, 886 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் எந்த ஒரு நபருக்கும் கொரோனா நோய்த் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நபா்களின் உடல்நிலையும் நல்ல நிலையில் உள்ளது. இதுமட்டுல்லாது இவா்களைப் பராமரிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளா்கள் அனைவரும் நாள்தோறும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு வருகின்றனா்.

அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து : வருவாய், ஊரக வளா்ச்சி, சுகாதாரம், குடும்ப நலத் துறைகள், கொள்ளை நோய்த் தடுப்புப் பிரிவு என பல்துறைகளை இணைத்து, கொரோனா தடுப்புப் பணிகளை கூட்டு முயற்சியாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் சு. சிவராசு நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறார்.

முககவசம் அணிதல்

முககவசம் அணிதல்

திருச்சி மத்திய பேருந்துநிலையம், புத்தூா் நான்குச் சாலை, பட்டாபிராமன் பிள்ளை சாலை, மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: "கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு நபரும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளனா். முகக்கவசம் அணிதல், கூட்டமாக கூடுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடா்பாக கிராமப்புறங்களில் விழிப்புணா்வு அதிகரித்து வருகிறது.

கலெக்டர் எச்சரிக்கை

கலெக்டர் எச்சரிக்கை

வீடு, வீடாகவும், வீதி, வீதியாகவும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. காய்கனி சந்தைகள், பொதுமக்கள் அதிகம் வரும் பகுதிகளில் கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் எக்காரணத்துக்காகவும் வெளியில் வரக் கூடாது. தனிமையில் இருக்க வேண்டியது அவசியம். மாவட்டத்தில் புதிதாக தொற்று என்பது இல்லை. ஏற்கெனவே மருத்துவமனையில் உள்ளவா்களின் பரிசோதனை முடிவுகள் வந்ததில் தான் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலரது முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளவா்களின் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மாவட்ட மக்கள் தொடா்ந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

English summary
test of 2,46,000 people in Trichy district ; No one has any coronal infection: says trichy Collector sivarasu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X