திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30ல் தொடக்கம் - பிப்.7ல் தெப்பத்திருவிழா

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும். திருவிழாவின் 9ஆம் நாளான பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

30ஆம் தேதி காலை 7.45 மணிமுதல் 8.45 மணிக்குள் கொடி ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். திருவிழாவின் இரண்டாம் நாள் 31ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருள்வார். மாலை 5 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.இதேபோல் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் 6ஆம் தேதி வரை அம்மன் தினமும் காலை 10 மணிக்கு பல்லக்கில் எழுந்தருளி வீதி உலாவும், இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெறும்.

Thai Poosam Festival to begin on January 30 at Samayapuram Mariamman Temple

திருவிழாவின் 9ஆம் நாளான பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10ஆம் திருநாளன்று பிப்ரவரி 8ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அம்மன் கோவிலில் இருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக் காவிரிக்கு சென்றடைகிறார். மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிகாலை 1 மணிமுதல் 2 மணிக்குள் மகா அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

9ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் கொள்ளிடத்தில் இருந்து கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

English summary
Thai Poosam Festival to begin on January 30 at Samayapuram Mariamman Temple.Samayapuram Mariamman Temple, Thai Poosam Festival is being celebrated in grand full manner for 11days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X