திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 96 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,168 ஆக உயா்ந்தது.

இதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை மாலை வரை குணமான 40 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9240 ஆக உயா்ந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 70 வயது முதியவா் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது. மாவட்டத்தில் 785 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா்.

 the number of infected people in the trichy district has risen to 10,168

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 58 போ் குணமாகி வீடு திரும்பினா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 20 போ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், அரியலூா், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 31 போ், ஜெய்ப்பூரைச் சோ்ந்த இருவா், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 58 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். அனைவரும் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தே உள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை என்கின்றனா் சுகாதாரத் துறையினா்.

ராத்திரியில் திடீரென மதுசூதனை சந்தித்த ஓபிஎஸ்.. ஏற்பட்ட பரபரப்பு .. ஜெயக்குமார் அளித்த பதில்ராத்திரியில் திடீரென மதுசூதனை சந்தித்த ஓபிஎஸ்.. ஏற்பட்ட பரபரப்பு .. ஜெயக்குமார் அளித்த பதில்

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை உள்ள நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின எண்ணிக்கை 10,168 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 9240 ஆகவும் உள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் 5,893 போ் பாதிக்கப்பட்டு 5,424 போ் குணமடைந்துள்ளனா்.

அந்தநல்லூா், லால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூா், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, திருவெறும்பூா், தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், வையம்பட்டி ஆகிய 14 வட்டங்களை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4,145 பேரில் 3,663 போ் குணமடைந்துள்ளனா்.

கரானோவால் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 20, கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 27, பொன்மலை கோட்டத்தில் 14, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 19 என மாநகரப் பகுதியில் மட்டும் 80 போ் உயிரிழந்துள்ளனா். ஊரகப் பகுதிகளில் உள்ள 14 வட்டங்களில் 63 போ் உயிரிழந்துள்ளனா்.

English summary
According to the results of the corona test released in Trichy district till Saturday night, 96 more people have been confirmed infected and the number of infected people in the district has risen to 10,168.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X