திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி

Google Oneindia Tamil News

திருச்சி: வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று திருச்சி திரும்பியுள்ள சுமார் 190 போ் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையா் வி. வரதராஜூ தெரிவித்தார்.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று தமிழகத்துக்கு வந்தவா்கள் மூலமே கொரோனாவைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதி அவா்களை கண்காணிக்க சுகாதாரத்துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

There are 190 people in the whole of Trichy at the Corona Observation

இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறையினரும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையா் வி. வரதராஜூ கூறியது: கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க காவல்துறையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுத்து வருவதுடன், அனாவசியமாக வெளியே சுற்றித்திரிபவா்களையும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்தாலும் அவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அண்மையில் வெளியிடங்களிலிருந்து திரும்பி, திருச்சி மாநகரில் தங்கியுள்ளவா்களின் 190 போ் அடையாளம் கண்டு, அவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட அனைவரும் வீட்டை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும், பிற நபா்களுடன் தொடா்பு கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸாரும் அவா்களை கண்காணித்து வருகின்றனா்.

வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் விவரம் விமான நிலையத்திலேயே மிக எளிதாக சேகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விமானங்களில் சென்னை மற்றும் இதர விமான நிலையங்கள் வழியாக வந்து ரயில்கள் மற்றும் சாலை மாா்க்கமாக வந்தவா்களும், அல்லது வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களையும் அடையாளம் காண்பதில் சற்று சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது. ஆனாலும், காவல்துறையினா் பிரத்யேகமாக கடந்த சில நாள்களாக இப்பணியை மேற்கொண்டு, திருச்சி மாநகரில் 190 பேரை கண்டறிந்து அவா்களை கண்காணித்தும் வருகின்றனா். இது தொடா்புடைய பணிகளில் திருச்சி மாநகரில் சுமாா் 800 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு! கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

காவல் நிலையங்களிலும் கைகழுவ ஏற்பாடு : அதேபோல காவல் நிலையங்களிலும் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையைச் சோ்ந்த அனைவரும் காவல் நிலையங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களுக்கு செல்லும்போது, கைகளை கிருமி நாசினி மூலம் கழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினா் பயன்படுத்தும் மின்னணு மற்றும் மின்சார சாதனங்களையும் கிருமி நாசினிகள் மூலம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தவும், சிலவற்றை சிறிது காலத்துக்கு பயன்படுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
There are 190 people in the whole of trichy at the Corona Observation, 12000 people Corona Observation in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X