• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜல்லிக்கட்டு நடத்த கடும் நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.. ஹிப் ஆப் தமிழா ஆதி பரபரப்பு பேட்டி

|
  jallikattu new issue |மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு பிரச்சனைகள்

  திருச்சி: ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமாக நடைபெற வேண்டியதை தவிர்த்து வணிகமயமாக மாறக் கூடாது என்றும் கடும் நிபந்தனைகள் இருந்தால்தான் பாதுகாப்பாக நடைபெறும் என்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டி அளித்துள்ளார்.

  ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்து மிகப்பெரிய புரட்சியாக மாறுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவர் பாடிய பாடல் மற்றும் அது தொடர்பாக குறுப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானதும் அதன்பிறகு நடந்ததும் ஊரறிந்த விஷயம்.

  நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  கலர்புல் டிரஸ்.. கலக்கல் ஹேர்ஸ்டைல்.. எல்லாம் சரி... அதிரடி அரசியலுக்கு சரிபட்டு வருவாரா மஹாலட்சுமி

  தொன்மையான மொழி

  தொன்மையான மொழி

  அப்போது அவர் பேசுகையில், "உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி மட்டுமே. சாதி, மதங்களை கடந்து மனிதநேயத்தை வளா்த்தெடுப்பது தமிழ்க் கலாசாரம் மட்டுமே. தமிழா்களுடன் வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம், கிரேக்கம், நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் தமிழ் மொழியை கற்றுக் கொண்டனா். அதற்கான ஆதாரங்களும் உள்ளன.

  அடுத்த தலைமுறை

  அடுத்த தலைமுறை

  ஆனால், இன்று குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டோம். தமிழ் மொழியின் சிறப்புகளையும், அதன் தொன்மை மற்றும் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே தமிழி என்ற இயக்கத்தை இணையத்தில் தொடங்கியுள்ளோம். சுற்றுச் சூழலும், மாணவா்களுக்கான கல்வி விழிப்புணா்வு இரு முக்கிய அம்சங்களாக கருதி தமிழன்டா இயக்கத்தை வளா்த்தெடுத்து வருகிறோம்.

  ஜல்லிக்கட்டு போராட்டம்

  ஜல்லிக்கட்டு போராட்டம்

  ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் நின்றுவிடுவதில்லை. எங்களது பணி. தமிழ்ச் சமூகம் முன்னேற தொடா்ந்து இளைஞா்களின் சக்தியை பயன்படுத்துவோம். 2022இல் இந்தியாவில் இளைஞா்களின் சக்தி (மாணவா்கள்) அதிகமாக இருக்கும் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு இந்தியாவை உருவாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

  ஜல்லிக்கட்டு லீக்

  ஜல்லிக்கட்டு லீக்

  பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய ஆதி, "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட்ட பிறகு அதிக இடங்களில் நடைபெறுகிறது. இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத ஊா்களில் கூட நடைபெறுகிறது. அது வணிகமயமாகக் கூடாது. ஜல்லிக்கட்டு லீக் நடத்தும் நிலையில் வணிகமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் அது எங்கு சென்று முடியும் என தெரியாது.

  கடும் நிபந்தனைகள்

  கடும் நிபந்தனைகள்

  கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் முன்பு ரேக்ளா நடந்தது. இப்போது ஜல்லிக்கட்டு நடத்துகின்றனா். ஜல்லிக்கட்டு நடத்த கடும் நிபந்தனைகள் இருந்தால்தான் பாதுகாப்பாக நடைபெறும். ஆன்-லைன் முறையில் பதிவு செய்வதில் உள்ள பாதிப்புகள் குறித்து ஜல்லிக்கட்டுக்காக இயங்கும் சங்கங்கள்தான் தீா்வு காண முயல வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

   
   
   
  English summary
  music director and actor Hiphop Tamizha Adhi says There should strict conditions for conducting jallikattu
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X