திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபேன்சி ஸ்டோரில் வாங்கிய மாஸ்க்.. காலில் கயிறு கட்டி சிக்னல்.. மணிகண்டனின் பகீர் வாக்குமூலம்

கொள்ளையன் மணிகண்டனிடம் 3-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    lalitha jewellery theft issue| நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் பிடிபட்டான்

    திருச்சி: "ஃபேன்சி ஸ்டோரில்தான் அந்த மாஸ்க் வாங்கினோம்.. காலில் கயிறு கட்டி சிக்னல் கொடுத்தோம்.." என்று அடுக்கடுக்கான பகீர் வாக்குமூலங்களை அசால்ட்டாக சொல்லி கொண்டு இருக்கிறான் கொள்ளையன் மணிகண்டன்!

    லலிதா ஜூவல்லரி கொள்ளையில், திருவாரூரில் மணிகண்டன் என்பவனை சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு விரட்டி பிடித்தார்.

    மணிகண்டன் சிக்கியதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் ஆதாரமே.. திருவாரூரில் 5 கிலோ நகையுடன் பிடித்த மணிகண்டனை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.

    கால் கலரை பாருங்க.. செருப்பை பாருங்க.. இவனுக வட நாடு கிடையாது.. நம்மாளுங்கதான்.. செம துப்பு!கால் கலரை பாருங்க.. செருப்பை பாருங்க.. இவனுக வட நாடு கிடையாது.. நம்மாளுங்கதான்.. செம துப்பு!

    மணிகண்டன்

    மணிகண்டன்

    இன்று 3-வது நாளாக மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டன் வீடு கேகே நகரில் உள்ளதால், அங்குள்ள மணிகண்டன் சொந்தக்காரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மணிகண்டன் கேரளா உட்பட பக்கத்து மாநிலங்களிலும் கைவரிசையை காட்டி உள்ளதால், இந்த விசாரணையில் அண்டை மாநில போலீசாரும் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    விவரங்கள்

    விவரங்கள்

    அந்த விசாரணையில் தாங்கள் கொள்ளை அடித்த விவரங்களை போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லி வருகிறான். இதற்கெல்லாம் மூல காரணம், ஸ்கெட்ச் போட்டு தந்தது முருகன் என்பதில் இருந்து பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

    ஃபேன்சி ஸ்டோர்

    ஃபேன்சி ஸ்டோர்

    "நகையை கொள்ளை அடிக்க ஒரு மாசத்துக்கு முன்னேயே பிளான் போட்டிருந்தோம். ஆளுக்கு 5 கிலோ நகைகளை பிரித்து கொள்வது என்பது எங்கள் ஐடியா. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகையை திருட ஒரு ஃபேன்சி ஸ்டோரில் பொம்மை மாஸ்க் வாங்கினோம். காஸ்ட்லியான மாஸ்க் வாங்கினால், அது ஈஸியா கண்டுபிடிச்சு தந்துடும் இல்லை, அதனாலதான் சாதாரணமான மாஸ்க் வாங்கி கொண்டோம்" என்று மிக நுணுக்கமான விஷயத்தில் இருந்து மணிகண்டனின் வாக்குமூலம் அதிர வைத்து வருகிறது.

    சிக்னல்

    சிக்னல்

    "2 பேர் உள்ளே போனோம்.. வெளியில ஒரு ஆளை சிக்னல் தர நிக்க வெச்சோம். சத்தம் போட்டு சிக்னல் தந்தால் மாட்டிக்குவோம் என்று காலில் கயிரை கட்டிக் கொண்டு சிக்னல் தந்து கொண்டோம். யாருமே பேசிக்கவில்லை. கொள்ளை நடந்து முடியும்வரை செல்போனும் யூஸ் பண்ணவில்லை" என்று அடுத்தடுத்த நுணுக்கமான டெக்னிக்கை சொல்கிறார் மணிகண்டன்.

    டூவீலர்

    டூவீலர்

    போலீசாரின் கவனம் எல்லாம் வட மாநில கொள்ளையர்கள் மீதேஇருந்ததால், நாங்கள் சிக்க மாட்டோம் என்று நினைச்சுட்டோம். அதனாலதான் தைரியமா டூவிலரில் வெளியே வந்தோம் என்கிறார். இன்னும் என்னவெல்லாம் மணிகண்டன் வாக்குமூலத்தில் வெளியாக போகிறதோ தெரியவில்லை!

    English summary
    Lalitha Jewellery Shop robbery: Trichy police are conducting an inquiry into Manikandan on the 3rd day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X