திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்

Google Oneindia Tamil News

திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிமுகவுக்கு வாக்களித்த விவகாரத்தில் தலைவர்களை குறை கூறுவது முறையல்ல என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் கட்சிமாறி வாக்களித்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றவர்களில் சிலர் தங்கள் உறவினர்களுக்கு மறைமுகத் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்றும், இதற்கு ப.சிதம்பரத்தையோ, கே.எஸ்.அழகிரியையோ குறை சொல்ல தேவையில்லை எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி..? கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு முதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி..? கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தொகுதி உலா

தொகுதி உலா

திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான திருநாவுக்கரசர் தனது தொகுதிகுட்பட்ட புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணி, காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவுக்கு வாக்களித்தது பற்றி மழுப்பலாக பதில் கூறிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சனைக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எனக் கூறினார்.

எனது ஆசை

எனது ஆசை

திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், கூட்டணி விவகாரத்தில் எழுந்த பிரச்சனையை ஸ்டாலின் தீர்த்துவிட்டதால் அதைப்பற்றி பேச ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.

அறிவுரை

அறிவுரை

காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பாக பாஜக எனும் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் அதிமுகவை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் சிந்திக்க வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி.கடுகடுத்தார்.

English summary
thirunavukkarasar mp says, don't blame Congress leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X