திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார்.. லோக்கல்தான்.. பரவாயில்லை கீழே இறங்குங்க.. டபாய்க்க பார்த்த மணிகண்டன்.. விரட்டி பிடித்த எஸ்ஐ!

கொள்ளையனை விரட்டி பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Robbery | தப்பிக்க பார்த்த மணிகண்டன்..விரட்டி பிடித்த எஸ்.ஐ

    திருச்சி: "சார்.. லோக்கல்தான்.. சும்மா அப்படியே பக்கத்து ஊருக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம்" என்று சொல்லி தப்ப முயன்றாலும்.. சுமார் ஒரு கிலோ தூரத்துக்கு துரத்தி சென்று.. கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்து கைது செய்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு!

    லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் திருச்சியில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கும் தப்பிச் செல்ல வாய்ப்பு இருக்கும் என்பதால், திருவாரூர், புதுக்கோட்டை என தனிப்படைகள் விரைந்து சென்றனர்.

    அதன்படி, தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் சிட்டி-க்கு உள்ளே நுழையும் பகுதியான வெட்டாறு அருகில் டவுன் போலீஸ் ஸ்டேஷன், சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு டீம் இறங்கி சோதனை நடத்தி கொண்டிருந்தது. அப்போதுதான் ஸ்பிளண்டர் வண்டி ஒன்று வந்தது. அதில் கைதான 2 கொள்ளையர்கள் உட்கார்ந்து இருந்திருந்தார்கள். வண்டியை ஓட்டி வந்தது மணிகண்டன், பின்னாடி இருந்தது சுரேஷ்.

    எஸ்ஐ பாரத நேரு

    எஸ்ஐ பாரத நேரு

    பைக்கை நிறுத்தினார் எஸ்ஐ பாரதநேரு.. அதற்கு அவர்கள் "சார்.. லோக்கல்தான் நாங்க.. பக்கத்து ஊருக்கு போய்ட்டு வர்றோம்" என்றனர். ரொம்ப கேஷூவலாக இவர்கள் பேசினாலும், அவர்கள் வைத்திருந்த பெட்டியை பார்த்ததும் பாரதநேருவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அது சாதாரண பெட்டி இல்லையாம்.. அமெரிக்க டூரிஸ்ட்டர் பிராண்ட்போல காஸ்ட்லியாக இருந்திருக்கிறது.

    பெட்டியில என்ன?

    பெட்டியில என்ன?

    அதனால் எஸ்ஐ, "சரி.. பரவாயில்லை கீழே இறங்குங்க.. அது என்ன கையில் பேக் இருக்கு? என்ன பேக்? உள்ள என்ன இருக்கு" என்று கேட்டார். இதை கேட்டதும்தான் கொள்ளையர்கள் உஷாராகி, பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் எஸ்ஐ விடவில்லையே.. பின்னாடியே அவர்களை துரத்தி கொண்டு ஓடியும் சுரேஷ் தப்பிவிட்டார்.

    விரட்டி பிடித்தார்

    விரட்டி பிடித்தார்

    ஆனால் பையை விடாமல், தூக்கிகொண்டு ஓடிய மணிகண்டனை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று மடக்கி பிடித்தார் பாரத நேரு. அதன்பிறகுதான் மைக்கில் தகவலை சொல்ல, மற்ற போலீசார் விரைந்து வந்து பெட்டியை திறந்து.. 5 கிலோ தங்க நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

    கேங் லீடர் முருகன்

    கேங் லீடர் முருகன்

    மணிகண்டன்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவ வழக்கில் முதல் ஆதாரமே.. இவரை வைத்துதான் சுரேஷ் கைது.. கேங் லீடர் முருகனுக்கு வலை என்று அதிரடிகள் ஆரம்பமாகின. இந்த மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் எஸ்ஐ பாரத நேருவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ், வெகுமதி அளித்து பாராட்டினார். திருச்சி மாநகர மக்களும் எஸ்ஐ-க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Congratulations to Thiruvarur SI Bharatha Nehru in Lalitha Jewellery robbery issue case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X