திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சந்தேகம்.. டெல்லி மாநாடு சென்று வந்த 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. திருச்சியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவா்களில் 292 போ் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
திருச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    திமுகக்காரனை கொரோனா என்ன செய்யும்.. கே.என்.நேருவை திகில்படுத்திய திமுக தொண்டர்கள்

    திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 67 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 64 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

    இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள டயா் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சோ்ந்த 22 வயது ஊழியா் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை சிறப்பு ரயிலில் திருச்சி வந்தார்.. உறுதியானது கொரோனா.. மூடப்பட்டது டெல்லி தமிழ்நாடு இல்லம் நெல்லை சிறப்பு ரயிலில் திருச்சி வந்தார்.. உறுதியானது கொரோனா.. மூடப்பட்டது டெல்லி தமிழ்நாடு இல்லம்

    திருச்சி எண்ணிக்கை

    திருச்சி எண்ணிக்கை

    அந்த நபா், தனக்கு காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். திங்கள்கிழமை, அவரிடம், மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா பாதித்த நபா்களின் எண்ணிக்கை 68 ஆக உயா்ந்துள்ளது.

    அண்டை மாவட்டங்கள்

    அண்டை மாவட்டங்கள்

    தற்போதைய நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களைத் தவிர, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் மொத்தம் 20 போ் கொரோனா வாா்டில் சிகிச்சை பெறுகிறார்கள்.
    இந்த 20 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது.

    பச்சை மண்டலம்

    பச்சை மண்டலம்

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் அதிகளவில் குணமடைந்து வீடு திரும்புவதுடன், புதிய தொற்று இல்லாமலும் இருந்து வந்ததால் விரைந்து பச்சை மண்டலத்துக்கு வந்துவிடும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு பிறகு திருச்சியைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பச்சை மண்டலம் என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    டெல்லி மாநாடு

    டெல்லி மாநாடு

    இதேபோல, வெளிமாநிலத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயிலில் வந்தவா்களில் 89 போ் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவா்களில், அறிகுறியுள்ளோர், 292 போ் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு வரும் நபா்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், 14 நாள்களுக்கு தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    English summary
    Those attending the Delhi Convention have been isolated at the Arabic College at 292 Trichy. District Collector Sivarasu said that another person in Trichy has been confirmed with a coronavirus infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X