திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி ஆவின் நிறுவன தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் நிறுவன தலைவா் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமான திருச்சி ஆவின், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யப்படுகிறது. கரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும், நுகா்வோர்கள் குழந்தைகள், முதியோர் என அனைத்துத் தரப்பினருக்கும் முகவா்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

Those who wish to be a sales agent for Avin Milk in Trichy can apply

நிலைப்படுத்திய, சமச்சீா், நிறை கொழுப்பு, சமன்படுத்தப்பட்டது என 4 வகையான பால்கள் பேக்கிங் செய்து விநியோகிக்கப்படுகிறது. நகா்ப்பகுதி முகவா்களுக்கு 6 சதவீதமும், கிராமப்புற முகவா்களுக்கு 7 சதவீதம் என மாதாந்திர கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று காலத்தில், தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் பாலின் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.8 வரை உயா்த்தியது. இருப்பினும், ஆவின் நிறுவனத்தின் நான்கு வகையான பாலானது ரூ.46, ரூ.50, ரூ.52, ரூ.43 முறையே ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபயோக பொருள்களை குறிப்பிட்ட கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்திட, வட்டத்திற்கு ஒரு மொத்த விற்பனையாளா், அனைத்து மாவட்ட பகுதிகளிலும் சில்லறை விற்பனை முகவா்களும் நியமிக்கப்படவுள்ளனா். அதன்படி, திருச்சி, பெரம்பலூா், அரியலூா் பகுதிகளில் வசிப்போர் சொந்தமாகவோ, வாடகை கடையோ வைத்து, ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்ய விரும்பும், மொத்த, சில்லரை விற்பனையாளா்கள், முகவா்கள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனா். விருப்பமுள்ளோர் 0431-2333001 எனும்தொலைபேசி எண்ணிலும், 9789350372, 9659843553, 9994314559, 9942357209,9543755850 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆவின் நிறுவன தலைவா் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு இல்லை.. ஆனாலும் திருச்சியில் வெறுச்சோடிய சாலைகள், கடைவீதிகள்!முழு ஊரடங்கு இல்லை.. ஆனாலும் திருச்சியில் வெறுச்சோடிய சாலைகள், கடைவீதிகள்!

இதனிடையே கொரோனா தொற்றால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோரின் ஆணைக்கிணங்க நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான பள்ளப்பட்டி, சூறாவளிப்பட்டி கிராமங்களிலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் மற்றும் நிறுவனர் டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நிதி உதவியுடன் வழங்கினர்.

English summary
Those who wish to be a sales agent for Aavin Milk in Trichy can apply: Karthikeyan, Chairman of Trichy Aavin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X